search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ProKabaddi"

    • தொடர்ந்து 3-வது முறையாக சாகர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    சென்னை:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதீ செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து 3-வது முறையாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கடந்த முறை 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    சாகர் ரதீ கூறுகையில், 'தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த நிலையை எட்டுவதே எங்களது இலக்கு. ஒவ்வொரு புள்ளி மற்றும் தடுப்பாட்டத்துக்காக நாங்கள் கடினமாக உழைப்போம்' என்றார்.

    அணியின் தலைமை பயிற்சியாளராக உதயகுமாரும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனும் செயல்பட உள்ளனர்.

    புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha
    பஞ்ச்குலா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் ‘ரைடு’ மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

    பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 ‘டை’ என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

    இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha 
    ×