என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest march"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்க இருந்த பேரணியை தடுப்பதற்காக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். #JammuKashmir #YaseenMalik
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உட்பட பல தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேரணி நடக்க இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த பேரணியை தடுக்கும் வகையில், காவல்துறையினர், யாசின் மாலிக்கின் இல்லத்தில் வைத்து இன்று காலை அவரை கைது செய்தனர்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்கள் சையது அலி ஷா ஜிலானி, மிர்வாயிஸ் மவுலவி உமர் பாரூக் மற்றும் மாலிக் ஆகியோர் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை கண்டித்தும், காரணம் இன்றி இளைஞர்களை கைது செய்ததை எதிர்த்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #YaseenMalik
    ×