என் மலர்
நீங்கள் தேடியது "PSO killed"
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று பிரபல ஆர் எஸ் எஸ் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Kishtwar #MilitantsAttack
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் சந்திரகாந்த் சர்மா. இவர் தனது மெய்க்காப்பாளருடன் கிஷ்த்துவார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பயங்கரவாதி ஒருவன் சந்திரகாந்த் சர்மா, அவரது மெய்க்காப்பாளரை நோக்கி சரமாரியாக சுட்டான்

இந்த திடீர் தாக்குதலில் சர்மாவின் மெய்க்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த சந்திரகாந்த் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதைத்தொடர்ந்து, கிஷ்த்துவார் மற்றும் பதெர்வா நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இண்டர்நெட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Kishtwar #MilitantsAttack