என் மலர்
நீங்கள் தேடியது "public periyakulam"
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம், பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்காக இந்த சாலை வழியாக சென்று வருவார்கள்.
இதனால் இச்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்வர்.
இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையை கடந்து வருகின்றனர்.
எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.