என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Public Relations Camp"
- வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,
வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
- பல்வேறு குறைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, விபத்து நிவாரணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
- அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.
- 194 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கே.நெற்புகப் பட்டி குரூப் சொக்கலிங்கம் புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு 166 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி யுடைய 126 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பணிகள் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரத்து500 மதிப்பீட்டிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மொத்தம் ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் கடனுதவிகளும் உள்பட மொத்தம் 194 பயனாளி களுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
- இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட முருகமலை நகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கி னார்.
முகாமில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது-
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகைக்கான சிறப்பு முகாம்கள் நடை பெற்று வருகிறது. முதிர்வுத் தொகை பெறமுடியாமல் தவறியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் மாவட்ட சமூகநலத்துறை அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நமது மாநிலம் குடும்ப நலத் திட்டத்தை செயல்படு த்துவதில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பா னதாக இருக்கும். குடும்ப கட்டுப்பாட்டை ஊக்கு விப்பது தொடர்பாக பல்வேறு சிறப்பு முகாம் நடந்து கொண்டிருக்கிறது அதில் ஆண்களுக்காக சிறப்பு கருத்தடை முகாமில் கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களை ஊக்குவிக்கும் விதமாக குலுக்கள் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.6.47 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களும், மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மூலம் 5 பயனாளிகளும், டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் 5 பயனாளிகளும் பயன் பெறுகின்றனர். இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும்.
இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டி, ஊராட்சி மன்றத்தலைவர் சின்னப்பாண்டி பெரிய குளம் வருவாய் கோட்டாட்சி யர் முத்துமாதவன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
- பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி:
பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டை முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொைக, புதிய ரேசன்அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம்,
விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ெகாள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.
மானாமதுரை
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
- உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் உள்வட்டம் பண்ணைப்புரம் வருவாய் கிராமம் உட்கடை மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- நிலக்கோட்டை தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெற நிலக்கோட்டை தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலக்கோட்டை,ஏப்.18-
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை,ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 19 -ந்தேதி நிலக்கோட்டை ஹெச்-என்.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மங்கள் பகவான் மண்டபத்தில்நடைபெறஉள்ளது. வத்தலகுண்டு ஒன்றியத்திற்குவருகின்ற 20-ந்தேதி வத்தலகுண்டு பேரூராட்சி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க இருக்கிறது.இம்முகாமில்மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளுக்கும் மனுக்கள் பெற உள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறநிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
- ஊராட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.
தேனி:
தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் ஊராட்சி க்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்த தாவது:-
தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்கள் ஒருவரும் இருக்ககூடாது. மேலும், மாணவ, மாணவி யர்களை தேர்வு எழுதுவற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி னாலும் கூட பெற்றோர்க ளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
ரேசன் கடைகளின் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்ட ப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசி யினை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரா ட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.
தற்போது, கொரோனா நோய்த் தொற்று மாவ ட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. காயச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகள் அறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் 218 பயனாளிகளுக்கு இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்