search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "published"

    • 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
    • படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.

    இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.

    இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

    படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.

    இந்நிலையில், கல்கி 2898 கி.பி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைரவா பாலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் பைரவா முழு பாடல் வெளியானது. இதை தொடர்ந்து இதன் முழு வீடியோ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
    • மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்த போது அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவை அரசு போராடிய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி மின்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது, அரசின் கட்டுப்பாட்டி லேயே இயங்கும். அனைவரின் கருத்தை அறிந்துதான் புதுவை அரசு செயல்படும் என உறுதியளித்தது. இப்போது மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அளித்த உறுதி மொழிக்கு எதிராக செயல்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தொழிற் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    மின்துறையை புதுவை மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் உள்ளதாக மின்துறை செயலாளர் கூறியுள்ளார். புதுவை அரசு மின் துறையை போலியாக மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் டெண்டர் கோரப் பட்டுள்ளதாக சொல்வது அப்பட்டமான, பொய்யான மோசடி. மின்துறை குறித்து பாராளுமன்றம், சட்ட மன்றத்தில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும், உயரதிகாரிகள் வேறு விதமான கருத்துக்களையும், பொய்யான விவரங்க ளையும் அளித்து வருகின்றனர்.

    இதனால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு களில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. புதுவை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு துணை போகக்கூடாது. மின்துறையின் இன்றைய நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

    ×