என் மலர்
நீங்கள் தேடியது "Pudhan"
- ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
- புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது .
ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம்.
நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.
- அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.
- அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.
''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும்,
நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...''
திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.
அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.
உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?
நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.
ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.
இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.
அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.
அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.
பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
அக்காரவடிசல் எப்படி செய்வது?
தேவையானவை: பச்சரிசி கால் கிலோ, பச்சைப் பருப்பு-100 கிராம், வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்.
இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.
அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது.
கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும்.
அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.
செய்முறை:
அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள்.
பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.
அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள்.
எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.
வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள்.
கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள்.
ஒரு லிட்டர் பாலை சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள்.
இறுக இறுக பால் சேர்த்து கிளறுங்கள்.
பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள்.
இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள்.
அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.
எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.
கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.
நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள்.
சூப்பராக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.
- அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
- விநாயகர் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி ஆனைமுகம் கடவுளை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான்.
அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்றருளியதோடு
அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார்.
அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
ஆனைமுகக் கடவுள் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது முப்பட்டணங்களும் அழிவதோடு,
அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார்.
விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்ல செல்ல,
உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான்.
இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை வேண்டி கொள்ள,
அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான்.
பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது.
சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.
ஆம், வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி.
இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகியப் புனித நாளாகும்.
இத்திருநாளில் சிவபிரானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணை திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம்.
அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு,
சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால்,
இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.
மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.