என் மலர்
நீங்கள் தேடியது "Pulwama"
- பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
- துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை அடுத்த நெஹாமாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. ரயிஸ் அகமது மற்றும் ரெயாஸ் அகமது ஆகிய பயங்கரவாதிகள் புல்வாமா மாவடத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடும் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து இவர்கள் மறைந்திருந்த வீட்டில் இருந்து தீப்பற்றி எரிவதும், வானில் கரும்புகை எழுவதுமான காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இருதரப்பிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மே 7 ஆம் தேதி பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பசித் தார் என்பது தெரியவந்தது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து, உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குருவால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். #IshaFoundation #PulwamaAttack

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரிப் அகமது (வயது 10). இவன் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தரையில் வெடிக்காமல் கிடந்த குண்டு ஒன்றை ஏதோ பொருள் என்று நினைத்து கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குண்டு வெடித்ததில் ஆரிப் அகமது படுகாயம் அடைந்தான்.
இதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தான்.