என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Punjab Assembly"
- பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் பதவியேற்றார்.
- இதனால் பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமை பெற்றார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.
பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.
மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் இன்று பதவியேற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமையை பெற்றார்.
- மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க. ஆபரேஷன் தாமரை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
- ஆபரேஷன் தாமரை குறித்து நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் சந்த்வானுக்கு பாஜ்வா கடிதம் எழுதியிருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம், பாஜக தனது 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில், குறைந்தபட்சம் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அணுகி தலா ரூ.25 கோடி வழங்க முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. அத்துடன், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் சிறப்பு அமர்வில், கேள்வி நேரமோ, பூஜ்ஜிய நேரமோ இல்லாததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு அவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் பார்தப் சிங் பஜ்வா கூறுகையில், "கேள்வி நேரமோ அல்லது பூஜ்ஜிய நேரமோ எடுக்கப்படாவிட்டால், விதான சபாவின் நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்பு பாஜ்வா பேசுகையில், "ஆம் ஆத்மி அரசாங்கம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு அமர்வைக் கூட்டி, மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க., 'ஆபரேஷன் தாமரை' எனப்படும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்" என்று கூறினார்.
'ஆபரேஷன் தாமரை' குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை என்ன என்பதை சபையில் தாக்கல் செய்யக் கோரி சபாநாயகர் சந்த்வானுக்கு பாஜ்வா கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் பேசும்போது, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
- பஞ்சாப் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
- இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
சண்டிகர்:
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, தலா ரூ.25 கோடி வீதம் கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் அணுகினார்கள் என ஆம் ஆத்மி சில வாரங்களுக்கு முன் அதிரடி குற்றச்சாட்டாக கூறியது. பஞ்சாப்பில் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறியது.
ஆபரேஷன் தாமரை திட்டம் நிறைவேறுவதற்காக அக்கட்சி முயற்சி செய்கிறது என்றும் கூறியது.
இதையடுத்து, பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என பகவந்த் மான் தெரிவித்தார். இதற்கு கவர்னர் பன்வாரி லால் 2 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கினார். இதன்படி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பகவந்த் மானின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
சபாநாயகர் குல்தர் சிங் சந்த்வான் குரல் வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்