search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab train accident"

    அமிர்தசரஸ் ரெயில் விபத்தின் போது ரெயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்ட குழந்தையை பெண் ஒருவர் பாய்ந்து சென்று காப்பாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. #PunjabTrainAccident
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் கடந்த 19-ந்தேதி இரவு தசரா கொண்டாட்டம் நடந்தது.

    ரெயில் தண்டவாளம் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தபோது சுமார் 600 பேர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்களில் பலர் தண்டவாளத்திலும், அதன் அருகேயும் நின்று இருந்தனர்.

    அப்போது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் பட்டாசுகள் அதிகமாக வெடித்ததால் ரெயில் வரும் சத்தம் கேட்கவில்லை. இதில் ரெயில் மோதி 60 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் அருகில் வருவதை பார்த்ததும் பலர் அலறியடித்தபடி ஓடினார்கள். அப்போது ஒரு குழந்தையை ஒருவர் தூக்கி வீசினார். அந்தரத்தில் வந்த குழந்தையை பார்த்த மீனாதேவி என்ற 55 வயது பெண் ஓடிச்சென்று பாய்ந்து குழந்தையை பிடித்தபடி கீழே விழுந்தார். இதனால் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

    உடனே குழந்தையை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    விசாரணையில் உயிர் தப்பிய 10 மாத ஆண் குழந்தையின் பெயர் விஷால் என்பதும், அவரது தாய் ராதிகா ரெயில் விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிந்தது.

    குழந்தை விஷாலை அவரது தந்தை புத்துனிராம் தூக்கி வீசி உள்ளார். ஆனால் அவர் ரெயில் மோதி பலியாகி விட்டார் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து மீனாதேவி கூறும்போது, “ரெயில் விபத்தில் நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். அப்போது ஒரு குழந்தை பறந்து வருவதை பார்த்ததும் பாய்ந்து சென்று பிடித்து காப்பாற்றினேன்” என்றார்.

    குழந்தையை காப்பாற்றிய மீனாதேவியை பலர் பாராட்டி உள்ளனர்.  #PunjabTrainAccident
    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அமிர்தசரஸ், மனவாலா வழித்தடத்தில் இன்று 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #PunjabTrainAccident #TrainsCancelled
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.

    அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இடைவிடாமல் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசு சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் ரெயிலில் அடிபட்டனர்.



    இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமிர்தசரஸ்-மனவாலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து  நிகழ்ந்தது.

    இந்த விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ்-மனவாலா வழித்தடத்தில் செல்லக்கூடிய 8 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரெயில்கள்  மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் அருகில் உள்ள ரெயில் நிலையங்கள் வரை இயக்கப்படுகின்றன. #AmritsarTrainAccident #PunjabTrainAccident #Dussehra #TrainsCancelled
    பஞ்சாப் ரெயில் விபத்தில் உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த கோர சம்பவத்திற்கு ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றன. #PunjabTrainAccident #Dussehra #SidhuWife
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

    தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

    ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



    சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட சென்ற மாநில கல்வி மந்திரி ஓ.பி.சோனியை பொதுமக்கள் தாக்கினர்

    ரெயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

    இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், விபத்து தொடர்பாக ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளன.

    ரெயில்வே தண்டவாளம் அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தைவிட்டு சென்றது தவறு என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

    நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் முழு  பொறுப்பு என்றும், நிர்வாகம் மீது பல்வேறு கேள்விகள் எழுவதால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்  மத்தியமந்திரியும் அகாலி தளம் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசு சரியாக செயல்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    முறையாக அனுமதியில்லாமல் காங்கிரஸ் கட்சி இந்த விழாவை நடத்தியதாக சில தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தி உள்ளார். #PunjabTrainAccident #Dussehra #SidhuWife
    ×