search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quits"

    அசாம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி உள்ளார். #AssamBJPMP #RPSharma
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்பில் 15 ஆண்டுகளும், பாஜகவில் 29 ஆண்டுகளும் பணியாற்றிய நான் இப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மாநில பாஜக குழு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை அவமதித்துவிட்டார்கள்’ என சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகிய அசாம் எம்பி சர்மா - டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா

    செல்வாக்கு மிக்க மாநில அமைச்சரான டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. அவர் தேஜ்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சர்மா, தேசிய கட்சியில் சேர உள்ளதாக கூறி உள்ளார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. #AssamBJPMP #RPSharma

    பிரெக்சிட் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர் கட்சி எம்பிக்கள் 7 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். #Brexit #LabourMPsQuit
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்சிட்) மார்ச் 29-ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.



    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த பிரிட்டன் பாராளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    இதற்கிடையே பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்பிக்கள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இவர்கள் தனிக்கட்சி எதுவும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இருந்து மேலும் சில எம்பிக்கள் வெளியேறலாம் என தெரிகிறது. யூத விரோத பிரச்சினையை சரிசெய்யாவிட்டால், ஏற்கனவே விலகிய 7 முன்னாள் எம்பிக்களுடன் இணைய விரும்புவது குறித்து யோசித்து வருவதாக இரண்டு எம்பிக்கள் கூறியுள்ளனர்.

    முக்கிய எம்பிக்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Brexit #LabourMPsQuit
    ஸ்லோவேனியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடையில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். #SloveniaMP
    லியுப்லியானா:

    ஸ்லோவேனியாவின் ஆளுங்கட்சியான எல்எம்எஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தரிஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் சமீபத்தில் லியூப்லியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

    அவர் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், எம்பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    இதுபற்றி தரிஜ் கிரஜ்சிச் கூறுகையில், “கடையில் இருந்த ஊழியர்கள் என்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று,  அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றேன். அப்போது என்னை யாரும் கவனிக்கவில்லை. என்னை பிடிக்கவும் முயற்சிக்கவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் பணம் செலுத்துவதற்காக திரும்பி வந்தேன். நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பொறுத்திருந்திருக்க வேண்டும்" என்றார். #SloveniaMP
    ×