என் மலர்
நீங்கள் தேடியது "Raashi Khanna"
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் `சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளில் இது மாதிரி விஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.

யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-
நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.

வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,
‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.
இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.
நடிகை ராசிகன்னா கூறும்போது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
Very happy to announce my next with one of my favourite actors @VijaySethuOffl
— Raashi Khanna (@RaashiKhanna) January 29, 2019
Really looking forward to working with the team.. ☺️ @vijayfilmaker@VijayaProdn
Also, some more exciting announcements on the way 😬
Happy to join with energy boosters music lovers @iamviveksiva @MervinJSolomon welcome bro and a special birthday wishes to mervin Bro god bless happy day 😘❤️😍🍫🤙 pic.twitter.com/J3K79gEysv
— vijay chandar (@vijayfilmaker) January 30, 2019
இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.
வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கும் நிலையில், இரு முன்னணி நாயகிகள் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். #VijaySethupathi #VijayChander
விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் அயோக்யா படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். #Ayogya #Vishal #SunnyLeone
‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்முட்டி நடிக்கும் ‘மதுரராஜா’ படத்திலும், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார்.

சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். #Ayogya #Vishal #SunnyLeone
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
இமைக்கா நொடிகள், அடங்க மறு படத்தில் நடித்த ராசி கன்னா, பிரபல நடிகருடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #RaashiKhanna
ராசி கன்னா தமிழில் அறிமுகமான ‘இமைக்கா நொடிகள்’ படமும் அடுத்து நடித்த ‘அடங்க மறு’ படமும் வெற்றி பெற்றதில் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது கட்டுக்கோப்பான உடலும் ரசிகர்களுக்கு அவரை பிடித்து போக ஒரு காரணம்.
இதுபற்றி கேட்டதற்கு, ‘நடிகைக்கு உடல்கட்டு மிக முக்கியம்னு நம்புகிறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். காரமான மசாலா சேர்ந்த உணவு வகைகள் எதுவும் பிடிக்காது. சாப்பாட்டு விஷயத்துல நிறைய சாப்பிடுகிற ஆள் இல்ல.
ஆரோக்கியமானதை சாப்பிடவேண்டும். அதுதான் என்னோட பிட்னஸ் ரகசியம். கறுப்பும் வெள்ளையும் எனக்கு பிடித்த நிறங்கள். இன்னொரு ரகசியம் சொல்கிறேன். யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுவேன். அடிக்கடி இசை கேட்பேன். பைக் என்றாலும், கார் என்றாலும் அதில் நீண்ட பயணம் செல்வது பிடிக்கும். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி 2 பேர் கூடவும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அனுராக், அதர்வாவுடன் தான் நடித்தேன். விக்ரம் வேதா பார்த்ததில் இருந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கணும்னு ஆசை வந்திடுச்சு. அதே மாதிரி அட்லீயோட தெறி, மெர்சல் ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய்-அட்லீ காம்பினேஷனில் நடிக்கணும்ங்கறது தற்போதைய ஆசை’ என்றார்.
ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் `அடங்க மறு' படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தில் நடிக்கும் போது, எனது மனைவி எனக்கு அடங்கி இருந்ததாக கூறினார். #AdangaMaru #JayamRavi
ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் ஜெயம் ரவி பேசும்போது,
‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.
ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார்.

அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர். #AdangaMaru #JayamRavi #AdangaMaruSuccessMeet
ஜெயம் ரவி பேசிய வீடியோவை பார்க்க:
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள்.
ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.

நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.
இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.
இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.
கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.
பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.

என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
ஜெயம் ரவி நடிப்பில் அடங்கமறு படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், தான் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். #JayamRavi #AdangaMaru #MGR
‘அடங்க மறு’ படத்தை அடுத்து தனி ஒருவன் 2 படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி அளித்த பேட்டி:
ஜெயலலிதா உங்கள் படத்தை பார்த்ததாக செய்தி வந்துள்ளதே?
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த தீபாவளி படத்தை அவர் ரசித்து பார்த்தார் என்று இப்போது தகவல் வந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. என் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவும், ஒரு விருது நிகழ்ச்சியிலும் அவரை சந்தித்து இருக்கிறேன்.
யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை?
எனக்கு எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.
அரசியலுக்கு வருவீர்களா?
நான் ஓட்டு போடுகிறேன். அந்த வகையில் பல ஆண்டுகளாக அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்களுடன் நடித்த கதாநாயகிகளில் யாரை பிடிக்கும்?
எனது முதல் கதாநாயகி சதாவை பிடிக்கும். ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
கமலுடன் நடிக்க ஆசை. நிறைவேறவில்லை.
சில படங்களின் வெளியீட்டின்போது சம்பளத்தை விட்டு கொடுத்தீர்களே?
ஆமாம். சில நேரங்களில் தயாரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகி விடுகிறது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு கை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது.
சினிமாவுக்கு குடும்ப ரசிகர்கள் மிகவும் முக்கியம். இப்போது இளைஞர்கள் தான் அதிகமாக வருகிறார்கள். முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடித்தால் குடும்ப ரசிகர்கள் பார்க்க வர மாட்டார்கள். #JayamRavi #AdangaMaru #MGR
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்க மறு' படத்தின் முன்னோட்டம். #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள படம் `அடங்க மறு'.
ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என் இளையராஜா, சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சிவா, வசனம் - விஜி, நடனம் - தினேஷ், ஆடை வடிவமைப்பு - ஜே.கவிதா, இணை தயாரிப்பாளர் - ஆனந்த் ஜாய், தயாரிப்பு நிறுவனம் - ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பு - சுஜாதா விஜயகுமார், இயக்கம் - கார்த்திக் தங்கவேல்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசியதாவது,
நான் 10 வருடத்திற்கு முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளிபோட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள்.
எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றார்.
படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #AdangaMaru #JayamRavi #RaashiKhanna