என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raashmika Mandana"

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தில் யார் நாயகியாக நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Raashmika
    ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.



    அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.


    ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என டுவிட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் இணைத்துள்ளார். ராஷ்மிகா அந்த டுவீட்டுக்கு கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay #RaashmikaMandana

    ×