என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabada"

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் விராட் கோலி, ரபாடா #ICCTestRankings #ViratKohli #Rabada
    டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கிலும், தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபாடா பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டின் கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ரபாடா பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

    விராட் கோலி 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் கடந்த 135 நாட்களாக இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் முதல் இடத்தை இழந்த ரபாடா மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வருடத்தில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    கொழும்பில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ரபாடாவும், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு எய்டன் மார்கிராமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட் மிகப்பெரிய பிரச்சனை என ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #DaleSteyn
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட்டுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.



    எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.

    35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.



    ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.

    டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    முதல் ஒருநாள் போட்டியில் ரபாடா மற்றும் ஷம்சி ஆகியோரின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 193 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.


    குசால் பேரேரா

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.



    ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார். #ICCTestRankings #Rabada
    துபாய்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்க தொடரில் 158, 60, 53, 85 ரன்கள் வீதம் மொத்தம் 356 ரன்கள் சேர்த்து தொடர்நாயகன் விருது பெற்ற இலங்கை வீரர் கருணாரத்னே, டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா 3 இடங்கள் குறைந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (929 புள்ளி), 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (903 புள்ளி), 3-வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (855 புள்ளி) நீடிக்கிறார்கள்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (882 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்துக்கு இறங்கினார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (892 புள்ளி) மீண்டும் முதலிட அரியணையில் ஏறினார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடமும் வகிக்கிறார்கள்.

    இலங்கை தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 இடங்கள் உயர்ந்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார். கொழும்பு டெஸ்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 5 இடங்களை பறிகொடுத்து 24-வது இடத்துக்கு (635 புள்ளி) பின்தங்கினார். கடந்த 11 ஆண்டுகளில் ஸ்டெயின் பெற்ற குறைந்த தரவரிசை புள்ளி இதுவாகும்.  #ICCTestRankings #Rabada
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதத்தால் இலங்கை அணி 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும் தென்ஆப்பிரிக்கா ஸ்டெயின், ரபாடா, பிலாண்டர் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இவர்களுடன் மகாராஜ், ஷாம்சி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளரும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தனர்.

    இலங்கை அணியின் குணதிலகே, கருணார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக கறங்கினார்கள். குணதிலகே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா 11 ரன்னிலும், மெண்டிஸ் 24 ரன்னிலும் வெளியேறினார். ரபாடாவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    அதன்பின் வந்த மேத்யூஸ் 1 ரன்னிலும், ஏஆர்எஸ் சில்வா டக்அவுட்டிலும் வெளியேற, இலங்கை அணி திணறியது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கருணாரத்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். அவர் சதம் அடித்தாலும் இலங்கை அணியின் ஸ்கோர் உயர்ந்தபாடில்லை.


    4 விக்கெட் கைப்பற்றிய ரபாடா

    கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய சண்டகன் 25 ரன்னில ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கருணாரத்னே 222 பந்துகள் சந்தித்து 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் சண்டகன் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக காலே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஷாம்சி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட், அதன்பின் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் வரும் 7-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.



    எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.

    ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.
    ×