என் மலர்
நீங்கள் தேடியது "Railway service"
- புறநகர் மின்சார ரெயில் சேவை ஏப்.1-ந் தேதி முதல் ஏப்.25-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
- சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில் கொருக்குப்பேட்டை - மூர்மார்க் கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-பேசின் பாலம் நிலையங்கள் இடையே பாலம் கட்டுமானப் பணி நடக்க உள்ளதால், புறநகர் மின்சார ரெயில் சேவை ஏப்.1-ந் தேதி முதல் ஏப்.25-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட நாட்களில் மூர் மார்க்கெட்- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் இரவு 10.35 மணி ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி செல்லும் இரவு 11.55 மணி ரெயில் ஆகிய 2 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 4.50 மணி ரெயில், சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 5 மணி ரெயில் ஆகியவை பேசின் பாலம்-மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-கும்மி டிப்பூண்டி செல்லும் அதிகாலை 6.25 மணி ரெயில், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை செல்லும் காலை 7.30 மணி ரெயில் ஆகியவை, மூர்மார்க் கெட்-பேசின் பாலம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில் கொருக்குப்பேட்டை - மூர்மார்க் கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 10.45 மணி ரெயில் ஆவடி - மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-ஆவடி செல்லும் இரவு 11.30 மணி ரெயில், மூர்மார்க் கெட்-வியாசர்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருத்தணி-மூர்மார்க் கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில், அரக்கோணம் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 9.45 மணி ரெயில், சூலூர்பேட்டை-மூர்மார்க் கெட் செல்லும் இரவு 9.40 மணி ரெயில் ஆகியவை சென்னை கடற்கரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரெயில்கள் பேசின் பாலம், சென்னை சென்ட்ரல் செல்லாது.
இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூ ண்டிக்கு புறப்பட வேண்டிய 2 மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட வேண்டிய சில ரெயில்கள், சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும்.
- கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
- சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மின் கம்பி விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையிலான புறநகர் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* கொல்லம்-தாம்பரம் சிறப்பு ரெயில்(வண்டி எண்:06028), கொல்லத்தில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரெயில், கொல்லம்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் முன்பதிவற்ற சிறப்பு ரெயில்(06049), இன்று மாலை 5.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.