search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainfall record"

    • களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மேற்கு மாவட்ட பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்ததையடுத்து அங்கு வெப்பம் தணிந்தது. மார்த்தாண்டம், திங்கள்சந்தை, களியக்காவிளை, திருவட்டார், ஊரம்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பத்துகாணி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அங்கு ஆலங்கட்டி மழை பெய்தது. அதை கையில் எடுத்து பொது மக்கள் ரசித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டி மலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 372 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 3.90 அடியாக இருந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 7.6, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-12.4, களியல் 10, குழித்துறை 23.2, புத்தன் அணை 5.8, சுருளோடு 28.4, தக்கலை 45, குளச்சல் 4, இரணியல் 5, பாலமோர் 2.4, திற்பரப்பு 11, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 4.2, முள்ளங்கினாவிளை 16.8.

    மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. நாகர்கோவில் கன்னியா குமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 

    • ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.
    • மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் வானில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.

    மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாவட்ட த்தில் இங்கு அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் அதாவது 5 செ.மீ். மழை பதிவானது.

    இதை போல் சென்னி மலை மற்றும் அதன் சுற்றுவ ட்டார பகுதிகளிலும் இடியு டன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூர், கொடிவேரிஅணை, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வைத்தாலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்ட ரில் வருமாறு:- மொடக்கு றிச்சி-54, சென்னி மலை-42, நம்பியூர்-24, கொடி வேரி அணை-17.20, சத்திய மங்கலம்-11, பெரு ந்துறை-3, கொடுமுடி-2.40.

    • குளிர்ச்சியான சூழல் நிலவியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் நாட்டறம்பள்ளியில் 62 மில்லி மீட்டர், திருப்பத்தூரில் 57.60 மில்லி மீட்டர், ஆலங்காயத்தில் 49 மில்லி மீட்டர், ஆம்பூரில் 43 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 35.80 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை லேசாக பெய்து நின்றது. பின்னர் இரவு10 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டிதீர்த்த கன மழையால் திருப்பூர் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒத்தக்கல் பாலம், கல்லூரி சாலையில் உள்ள பாலங்களில் மழைநீர் அதிக அளவு சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காகதோண்டப்பட்ட இடங்களில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு 46 மில்லி மீட்டர், அவிநாசி 37 மில்லி மீட்டர், பல்லடம் 29 மில்லி மீட்டர், ஊத்துக்குளி 11 மில்லி மீட்டர், காங்கேயம் 43 மில்லி மீட்டர், தாராபுரம் 27 மில்லி மீட்டர், மூலனூர் 11 மில்லி மீட்டர், குண்டடம் 55 மில்லி மீட்டர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 52 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு 68 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 504 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து இருந்தாலும் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் இங்கு குறைந்த அளவே மழை பதிவாகும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்ற காரணத்தால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தால் ஈரோடு மாவட்டத்திலும் மழை பதிவாகும்.

    பருவமழையும் குறைந்த அளவே பதிவாகும். ஆனால் கடந்த சில ஆண்டாக தென்மேற்கு பருவமழையைவிட, வட கிழக்கு பருவமழை யின்போதே அதிகமாக மழை பதிவாகியது. இருப்பினும் இம்மாவட்ட த்தின் சராசரி மழை 733.44 மி.மீட்டராகும்.

    இந்நிலையில் நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 581.61 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் தினமும் மாலையில் மழை பெய்து வருவதாலும், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்வதாலும், நடப்பாண்டு பயிர் சாகுபடிக்கு, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 212 மி.மீட்டர் பதிவாகும். கடந்த சில ஆண்டாக இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தவிர வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், முதல் டிசம்பர் வரை 316 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நடப்பா ண்டு இதைவிட கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதற்கேற்ப பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக முழு கொள்ளளவில் உள்ளது.

    நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதுடன் உபரி நீரே வெளியேற்றும் நிலை உள்ளதால் நடப்பாண்டு இரு போக சாகுபடியும் உறுதியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×