என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "raj tarun"
- ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன் என லாவண்யா கூறினார்.
- இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார் எனவும் கூறினார்.
தெலுங்கு நடிகரான ராஜ் தருண் 2013-ம் ஆண்டு வெளியான உய்யால ஜம்பாலா படம் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.இவர் மீது லாவண்யா என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், "ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன். இதனால் கர்ப்பமான என்னை கருக்கலைப்பு செய்ய நிர்ப்பந்தித்தார். இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார். என்னை துன்புறுத்துகிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ராஜ்தருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தனது நகைகளை திருடி விட்டதாக மால்வி மல்கோத்ரா மீது லாவண்யா போலீசில் இன்னொரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், "எனக்கு சொந்தமான தங்க வளையல்கள், தாலி சரடு, பிரேஸ்லெட், செயின் போன்ற நகைகளை ராஜ் தருணுடன் இணைந்து மால்வி மல்கோத்ரா திருடிச் சென்று விட்டார். இவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம். எங்கள் வீட்டுக்கு மூன்று முறை அவர் வந்துள்ளார். நகைகள் வைத்திருந்த பீரோ சாவி அவரிடம்தான் இருக்கிறது'' என்று கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.