என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rajinikanth"
- மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தளபதி திரைப்படம்.
- இவர்களுடன் ஜெய்ஷங்கர்,அம்ரிஷ் புரி, ஸ்ரீவித்யா, ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தளபதி திரைப்படம். இப்படத்தில் இவர்களுடன் ஜெய்ஷங்கர்,அம்ரிஷ் புரி, ஸ்ரீவித்யா, ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றும் பல ரீல்ஸ்களில் நாம் பார்த்து வருகிறோம்.
இன்னும் நட்புக்கு ஒரு எடுத்துக் காட்டாக சூர்யா மற்றும் தேவா கதாப்பாத்திரங்களை குறிப்பதுண்டு. இந்நிலையில் இத்திரைப்படம் ரஜினிகாந்தின் 74- வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் 4K டிஜிட்டல் வெர்ஷனில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரிரீலிஸ் செய்யப்படவுள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன.
ரஜினி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்.
- நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும். இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். புத்தக வெளியிடணுமா... பாட்டு வெளியிடணுமா... எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு கூடவெச்சிக்கணும். ஆனால் நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம். அதற்குள் அய்யோ... அய்யோ.. என கூச்சல்.
ஏன் தெரியுமா? அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார்... நாம அரசியல் சூப்பர் ஸ்டார்... இரண்டு ஸ்டாரும் சந்தித்ததில் பயம் வந்துடுச்சு என்றார்.
முன்னதாக கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்து பேசியது தொடர்பாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வெளிவந்த நிலையில், அதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
- மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.
- கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள்.
ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் காணொலியில் பேசி இருந்தார். அவரது பேச்சு வருமாறு:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரின் துணைவியாரும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆன ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ என்னை நேரில் அழைத்தார் அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.
எம்.ஜி.ஆர். சாதாரண மனிதர் அல்ல என்று அப்போதே அவர் கணித்திருந்தார். திரை உலகில் புகழின் உச்சியில் இருந்த போது தனது திரை வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை அவர் மணந்து கொண்டார். எம்.ஜி.ஆரை மிகவும் சந்தோசமாக வைத்துக்கொண்டதுடன் அவரை பாதுகாக்கவும் செய்தார்.
கடைசி வரை எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தார். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரித்தார். சாப்பாடு என்றால் சாதாரண சாப்பாடு கிடையாது. சைவ, அசைவ சாப்பாடுகளும் நல்ல முறையில் போடப்பட்டன. தினமும் 300 பேருக்காவது எம்.ஜி.ஆரின் வீட்டில் ஜானகி அம்மாள் சாப்பாடு போட்டு விடுவார்.
கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்ததை அனைவருமே அறிவார்கள்.
நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா படத்தின் போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார். படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்.
அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான்... கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, அவர் எடுத்த முடிவு... ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம்.. பக்குவத்தை உணர்த்தியது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது
இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசும் போது, விஜயகாந்துடன் திருமணம் முடிந்ததும் ராமாவரம் தோட்டத்துக்கு நேரில் சென்று எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் இருவரிடமும் வாழ்த்து பெற்றோம். இருவரும் மறையும் வரையில் எங்கள் மீது அன்பு செலுத்தினார்கள்.
அமெரிக்கா சென்று திரும்பிய போது எனக்கு ஜானகி அம்மாள் வாட்ச் வாங்கி வந்து கொடுத்ததை மறக்க முடியாது. எம்.ஜி.ஆர். நினைவாக எங்களுக்கு அளிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் கோட், அவரது பிரசார வாகனம் ஆகியவற்றை இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம் என்றார்.
- தமிழ்நாட்டு மக்கள் கிட்ட சொல்றேன். ... யாரும் சீமானை நம்பாதீங்க...
- உங்கள் மேல நான் வந்து வழக்கு தொடுத்தா திமுக கால்ல போய் விழுறீங்க...
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசியல் கட்சியை அறிவித்த ரஜினிகாந்த் அதன்பிறகு அரசியலில் இருந்து விலகுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனிடையேதான் நேற்றுமுன்தினம் சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்தேறியது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும்நிலையில், நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-
விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பார்த்தாச்சி. அது எதுவும் வேலைக்கு ஆகாது என்றதும் அடுத்ததா போயஸ்கார்டனில் ரஜினி சார் வீட்டில் போய் பிச்சை எடுக்கலாம்-னு போய்ட்டிங்களா Mr. சீமான்.
விஜய் அண்ணா கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா. ரஜினி சார் யாருனு ஞாபம் இருக்கா. அவங்க அரசியலுக்கு வரன்னு சொன்ன உடனே உங்க வாய் தான் சொல்லிச்சு. அவர் கன்னடாக்காரர்... அவர் மேல உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு வறுத்து எடுத்துட்டுப் பார்க்கணும்னு நான் விருப்பப்படுறேன்னு அப்படின்னு மேடைமேடையா அவரை கொச்சைப்படுத்துனீங்களே... அத மறந்துட்டா போய் நேற்று (வியாழக்கிழமை) அவர் வீட்டில் பிச்சை எடுத்துட்டு நின்னுக்கிட்டு இருந்தீங்க.. அசிங்கமா இல்ல..
விஜய் அண்ணாக்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு ரஜினி சார் கால்ல விழுறீங்க... உங்கள் மேல நான் வந்து வழக்கு தொடுத்தா திமுக கால்ல போய் விழுறீங்க... உங்கள யாரும் நம்ப மாட்டாங்க Mr.சீமான். தமிழ்நாட்டு மக்கள் கிட்ட சொல்றேன். ... யாரும் சீமானை நம்பாதீங்க...
இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசி உள்ளார்.
"ரஜினி சார அவ்ளோ பேசிட்டு அந்த பக்கம் தாவிடீங்களே Mr. சீமான்"விஜயலட்சுமி வெளியிட்ட புது வீடியோ#vijayalakshmi #ThanthiTV pic.twitter.com/BXIsmAsytc
— Thanthi TV (@ThanthiTV) November 23, 2024
- நிலைப்பாட்டை இன்றுவரை மாற்றிக் கொள்ளாத அரசியல் தலைவராக சீமான் அறியப்படுகிறார்.
- வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வளர்ச்சி.
நடிகரும், இயக்குநருமான சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி "நாம் தமிழர்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்ற கொள்கையை கொண்டுள்ளது. திரைத்துறையில் இருந்து அரசியல்வாதியானவர்கள் பட்டியலில் இணைந்து கொண்ட சீமான், உணர்ச்சி பொங்க மேடையில் பேசுவதில் திறன் பெற்றவர். கட்சி தொடங்கியது முதலே தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை இன்றுவரை மாற்றிக் கொள்ளாத அரசியல் தலைவராக சீமான் அறியப்படுகிறார்.
தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்ற வேட்கை கொண்ட கட்சியாக நாம் தமிழர் அறியப்படுகிறது. இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம் என அரசியலில் பல்வேறு புதுமைகளை பற்றி பேசி வந்த போதிலும், தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சிக்கு இன்றுவரை வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எனினும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வளர்ச்சியை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் என பலமுனை போட்டி நிறைந்த தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒற்றை அடையாளமாக வலம் வருபவர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அரசியல் பயணம் தொடங்கி பொது வாழ்வில் 'அரசியல்' பிரபலமாக அறியப்படும் சீமான்- தான் கூறும் கருத்துக்கள், அந்த கருத்துக்கு முரணான விளக்கங்களை கூறும் நபராகவும் அறியப்படுகிறார்.
தொடக்க காலங்களில் பெரியாரின் பேரன் என்று மேடைகளில் உருமிய சீமான், பின்னர் பெரியாரை ஒவ்வொரு மேடைகளிலும் வசைபாடவே செய்தார். இதேபோன்று, தி.மு.க. முன்னாள் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அதீத விமர்சனங்களை தவிர்த்த சீமான், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். சீமானுக்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் புகுந்த கேப்டன் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை தொடங்கி, தமிழ்நாடு அரசியலில் குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்று எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் தொடர் வெற்றி பெற்று வந்தார். விஜயகாந்த் அரசியலை எதிர்த்து களம் கண்ட சீமான் பல்வேறு பிரசாரங்களில் விஜயகாந்த்-ஐ கடுமையாக விமர்சித்தார். விஜயகாந்த் தமிழரே இல்லை என்பதில் தொடங்கி விஜயகாந்த் பற்றி தரம்தாழ்ந்து தனிநபர் விமர்சனங்களாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர் சீமான்.
கேப்டன் விஜயகாந்த்-க்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். 1996 ஆம் ஆண்டு தன்னைத் தேடி வந்த அரசியல் வாய்ப்பை ஏற்க மறுத்த ரஜினிகாந்த், அதன்பிறகு பல்வேறு சமயங்களில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து வந்தார். ரஜினிகாந்த்-இன் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனை பூர்த்தி செய்யும் வகையில், அரசியல் கட்சியை அறிவித்த ரஜினிகாந்த் அதன்பிறகு அரசியலில் இருந்து விலகுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகைக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தார் சீமான். இதனிடையேதான் நேற்று சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்தேறியது.
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை ஒட்டி சீமான் முன்வைத்த விமர்சனங்கள்:
- ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்.
- 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் இருந்ததால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றில்லை.
- நாங்கள் எங்கள் மாநிலத்தை பார்த்துக் கொள்வோம், ரஜினி இங்கு செய்ய நினைப்பதை நாங்களே செய்து கொள்வோம்.
- ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து, சம்பாதிக்கலாம். அதைத் தாண்டி அவர் இந்த மாநிலத்தில் வேறு எதையும் செய்யக்கூடாது.
- தமிழனாக பிறந்தவன் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற சித்தாந்தம் நம்மிடம் உள்ளது.
- நான் மட்டுமல்ல, திருக்குறளிலும் கூறப்பட்டுள்ளது.
- யாரையும் ஆள விடாமல் இந்த அரசு அவமானத்தை சந்தித்துள்ளது. நாம் அனைவரும் சுயமரியாதையுடன் உயர்ந்து வருகிறோம்.
- ரஜினிகாந்த் இன்னும் 10 படங்களில் நடித்தாலும் பிரச்சனை இல்லை. அவர் மாநிலத்தை ஆள விரும்புகிறார் என்பதில்தான் சிக்கலானது.
- நம் மக்களை ஆள்வதற்கு நமக்கு உரிமை உண்டு, ஆனால் வேறொருவரின் ஆட்சியில் வாழ்வது அடிமைத்தனம். நாம் அடிமைகளாக இருக்க முடியாது.
- தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிய ரஜினிகாந்த்-க்கு சீமான் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பின் சீமான் அவரை பல சமயங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தார். ரஜினிகாந்த் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கு சீமான் தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த பிறகு, சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வருகிறார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இலத்திற்கு நேற்று (நவம்பர் 21) சென்ற சீமான் அவரை நேரில் சந்தித்தார். தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் களமிறங்கிய பிறகு சீமான் முதல்முறையாக ரஜினிகாந்த்-ஐ சந்தித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்தது பற்றி பேசிய சீமான் கூறியதாவது..,
தமிழக அரசியல் பற்றி பேசும் போது ரஜினிகாந்த் system wrong-னு ஆங்கிலத்தில் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு மாத்தனும்னு சொன்னேன். இதுகுறித்து நாங்கள் பேசினோம்.
ரஜினிகாந்த் சொல்கிற தமிழக அரசியலில் வெற்றிடம் இன்னமும் இருக்கிறது.
ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகையின் போது அவரை கடுமையாக எதிர்த்த சீமான், தற்போது அவரை நேரில் சந்தித்து இருப்பது அவரின் கருத்துக்கள் சரிதான் என்று கூறுவது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவும், அரசியல் விமர்சகர்கள், அரசியலை பின்பற்றும் பொது மக்களை கூர்ந்து கவனிக்கவும் செய்துள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் அரசியல் கட்சியை அறிவித்தது முதல் அவருக்கு ஆதரவு தெரிவித்து தம்பியாக உறவாடி வந்த சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். த.வெ.க. கட்சியின் கொள்கை தங்களுக்கு முரணாக இருப்பதாக கூறிய சீமான், த.வெ.க. தலைவர் விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர் சீமான், தனக்கென பெரும் இளைஞர் படையை வழிநடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர் பட்டாளத்தின் வாக்கு வங்கியாக கொண்டுள்ள சீமான், சக அரசியல் தலைவர்கள் பற்றி முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறாரோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக எழத்தொடங்கியுள்ளது.
மக்கள் இதை கணிக்கும் முன்பே அவருடன் அரசியல் களத்தில் போராடி வரும் சக நாம் தமிழர் தோழமைகளும் கூட சமீப காலங்களில் சீமானின் அரசியல் கருத்துக்களை பின்பற்றி கட்சியில் தொடர முடியாமல் அக்கட்சியில் இருந்து பெரும் படையுடன் வெளியேறி வருகின்றனர்.
- உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கின்னு சொல்றவங்க தான்.
- திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறீங்க.
சென்னை:
ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் கூறியதாவது:-
சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கின்னு சொல்றவங்க தான்.
திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறீங்க. எதுக்கு சந்திக்க போனோம்னு சொல்லமாட்டிறீங்க... என்ன சந்திச்சி பேசினோம்னு சொல்லமாட்டிறீங்க. இப்போ நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசினதை சொல்றேன். அதை ஏன் சொல்ற மாட்டீறீங்க. அதை ஏன் சொல்ல மாட்டிறீங்க.. அப்போ என்னை வந்து கேட்குறாங்க கள்ள உறவான்னு.. நல்ல உறவே இருக்கு.
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்மந்திங்கள் மாதிரி பிரதமரும், முதலமைச்சரும் போய் சந்தித்து வர்றீங்க. ஆனா வெளியில வந்து எங்களை சங்கின்னு சொல்றீங்க. இது என்ன கொடுமை . திமுகவை எதிர்த்தாலே சங்கின்னா... அப்போ இத எப்படி சொல்றது ... அப்போ பெருமையா நாங்க சங்கி-ங்கறத ஏற்கதான் வேண்டும். சங்கின்னா நண்பன் என்று பொருள் இருக்கு என்றார்.
- ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.
- நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்யும்போது அந்த தலைவனை மக்கள் கொண்டாடுவார்கள். அப்படி இல்லாததால் நாங்க நல்ல ஆட்சி கொடுத்து இருக்கோம்... சிறப்பாக செய்றோ... யாராலையும் குறை சொல்ல முடியாதுன்னு ஆட்சியாளர்களே சொல்றாங்க.
மக்களால் கொண்டாடப்படும் தலைவன் என்றால், ஒரு தலைவன் வரப்போ தன்னிச்சையா ஓடிப்போய் மக்களே வரவேற்பு கொடுக்கறது இருக்கோம். ஆனா இங்க அப்படி இல்ல... நல்ல ஆட்சி கொடுத்தா வாக்குக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை தேவை இல்லை. அவசியமே இல்லை. தொடர்ச்சியா அதை தான் செய்றாங்க.. இங்க வந்து ஒண்ணுதான் சொல்ல தோணுது... சேவை அரசியலோ... செயல் அரசியலோ கிடையாது... செய்தி அரசியல் தான். கட்சி அரசியல் தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படலை. இந்த மாறுதல் தான் System Wrong-னு ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு மாத்தணும்னு சொன்னேன். அதுகுறித்து தான் பேசினோம்.
இந்த நாடும் மக்களும் நல்லா இருக்கணும் நினைக்கிறே எல்லா நல்லா உள்ளங்களுக்கும் அரசியல். அதுவே அரசியல் தான். ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.
நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல். ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிரை பிரிப்பதும் ஒரு மனிதனின் வாழ்வியலில் இருந்து அரசியலை பிரிப்பதும் இரண்டும் ஒன்று தான் என்பது என்னுடைய மதிப்பீடு. என்னுடைய புரிதல், கோட்பாடு... அந்த அடிப்படையில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அரசியல் என்பது தனியா என்று இல்லை. அது வாழ்வியல். அதனால் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. அந்த அரசு அரசியலைத்தான் தீர்மானிக்கிறது. அதனால் ரஜினிக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் எப்படி இருக்கும்.
விமர்சனத்தை கடக்க இயலாதவன், விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவன் அற்ப வெற்றியை கூட தொடமுடியாது. இதை என்னிக்கோ நான் படிச்ச கோட்பாடு என்றார்.
- நல்ல தலைமை எது என்பதை மக்கள் தான் முடிவு செய்யணும்.
- இங்கு தலைவர்கள் உருவாகவில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்து பேசினார்.
இதையடுத்து ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது குறித்து சீமான் கூறியதாவது:-
ரொம்ப நாளாகவே சந்திக்கணும் என்று இருந்தது. அதனால நேற்று சந்தித்தோம். அன்பின் நிமித்தமாக மரியாதையான சந்திப்பு தான். அரசியல் கொடூரமான ஆட்டம். ரஜினிகாந்தின் மனநிலைக்கு இது சரி வராது. இந்த களத்தில் நேர்மையாக இருக்கறது ரொம்ப கஷ்டம்.
நிறைய நேரம் பேசினோம். அதை எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியாது. ஒரு அன்பான மரியாதை நிமித்தமான சந்திப்புதான். திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம்.
நல்ல தலைமை எது என்பதை மக்கள் தான் முடிவு செய்யணும். இங்கு தலைவர்கள் உருவாகவில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.
உருவாக்கப்படும் தலைவர்களுக்கு உழைக்கும் அடிதட்டு மக்களின் உணர்வு, பசி, கண்ணீர், கவலை என்று எதுவும் தெரியாது. அந்த மாதிரியான தலைவர்கள் இப்போ இல்லை. அதனால ரஜினிகாந்த் சொல்ற மாதிரி வெற்றிடம் இன்னமும் இருக்கிறது.
ரஜினிகாந்த் சொல்ற மாதிரி வாக்குகள் நன்மதிப்பு பெற்று பெறப்படுவதில்லை. வாங்கப்படுகிறது என்றார்.
- அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
- ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படம் அவரது பிறந்தநாளான வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனிடையே ரஜினியின் 'கூலி' படமும் அன்றே வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி," என குறிப்பிட்டுள்ளார்.
- நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை.
- ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன்.
சென்னை:
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இன்று எக்ஸ் தள பக்கத்தில் ரஜினி உடனான சந்திப்பு குறித்து கவிதை நடையில் கூறியிருப்பதாவது:-
கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
'கிரீன் டீ'யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.
#Superstar @rajinikanth அவர்கள் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தை தயாரித்ததற்காக… pic.twitter.com/l2ilz7l4gX
— Turmeric Media (@turmericmediaTM) November 2, 2024
இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
The Voice of Honor ?#Superstar @rajinikanth Sir praised Team #Amaran #AmaranDiwali #MajorMukundVaradarajan #KamalHaasan #Rajinikanth #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP… pic.twitter.com/o6xQytOTke
— Raaj Kamal Films International (@RKFI) November 2, 2024
அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்