search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rallies"

    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கான நிதியை அளிப்பது யார்? என பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivSena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த், பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு கொள்கைக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டுமா எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிக்குமான நிதியை வழங்குவது யார்? என கேள்வி எழுப்பிய எம்.பி அரவிந்த், ஒருவேளை அரசாங்கத்தின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுமானால், அது சரியா எனவும் வினவினார்.

    தொடர்ந்து பேசிய எம்.பி, தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவு தொகையினை மட்டும் பயன்படுத்தி தேர்தலில் வென்றோம் என தங்கள் மனதை தொட்டு எம்.பிக்கள் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், தேர்தலின்போது எம்.பிக்கள் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல், அனைத்து பிரதமர்களும் தேர்தலின்போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்.பியாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். #ShivSena
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு 50-க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது. #BJP #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 

    இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி 50க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்க உள்ளார். சுமார் 100 மக்களவை தொகுதிகளும் இதில் அடங்கும். இரண்டு அல்லது மூன்று மக்களவை தொகுதிக்கு ஒரு பேரணி நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  மற்றும் நிதின் கட்கரி உள்பட பலரும் 50-க்கு மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தை பரபரப்பாக பிரபலப்படுத்த பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது. #BJP #PMModi
    ×