என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadoss Advale"

    • ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    • ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை:

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

    இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.

    ×