என் மலர்
நீங்கள் தேடியது "ramalan"
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலை நேரத்தில் உணவு உண்ட பின்னர், அன்றைய நோன்பை தொடங்குவார்கள். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நோன்பு வைப்பவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக குரான் வரிகளை கூறிகொண்டு ஒரு குழு வீதி வீதியாக செல்வார்கள்.
இந்த பாரம்பரிய முறை கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இந்த பாரம்பரிய முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குரான் வரிகளை மைக்கில் கூறிக்கொண்டே குழு ஒன்று வீதி வீதியாக சென்று நோன்பு கடைப்பிடிப்பவர்களை எழுப்பியுள்ளது. ரமலான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவம் தனது வழக்கமான சோதனை மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.