என் மலர்
நீங்கள் தேடியது "Ramaniyammal"
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். #VijaySethupathi #Ramaniyammal
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு உருவாகி வருகிறது. இதில் இடம் பெறும் சிறப்பு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.

விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. #VijaySethupathi #Ramaniyammal