search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rambha"

    • இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
    • ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

    பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை ரம்பா. விஜயவாடாவில் பிறந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.

    தனது 15 வயதில் மலையாள படத்தின் மூலம் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார் ரம்பா. அதை தொடர்ந்து தெலுங்கில் நடித்தார். தமிழில் 'உழவன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரம்பா. அப்படத்தை தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா', 'சுந்தர புருஷன்', 'செங்கோட்டை', 'விஜபி', 'அருணாச்சலம்', 'காதலா காதலா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக 'பெண் சிங்கம்' என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    100 படங்களுக்கு மேல் நடித்த இவர், தற்போது திரையுலகிலேயே தலைகாட்டாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரம்பா அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை, ரம்பா குடும்பத்துடன் சந்தித்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அதற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நடித்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என பலரும் கேட்கின்றனர். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜயகாந்த் அண்மையில் காலமானார்.
    • இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.


    இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை ரம்பா மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    • 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா.
    • இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.

    வெள்ளித் திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

    தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.


    இந்நிலையில், நடிகை ரம்பா 'அருணாச்சலம்' படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி செய்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் ரஜினியை பார்க்க சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சல்மான் கான் உடன் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்துள்ளேன். அதனால் அவரை பார்த்ததும் மும்பையில் வழக்கமாக ஹீரோக்களை பார்த்தால் கட்டிப்பிடிப்பது போன்று கட்டிப்பிடித்தேன்.


    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் செட்டில் திடீரென டென்ஷன் ஆகிவிட்டார். எல்லோரும் ரஜினியை பார்க்கின்றனர். அப்படியே திரும்பி என்னை பார்க்கின்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின்னர் ரஜினி செட்டில் இருந்த அனைவரையும் வர சொல்லி ரம்பா, சல்மான்கானுக்கு எப்படி வணக்கம் வைத்தார். நமக்கு எப்படி வணக்கம் வைத்தார் என நடித்து காட்டினார். மேலும், தென்னிந்தியர்கள் எல்லாம் என்ன இளிச்சவாயனுங்களா, உங்க ஆட்களுக்கு மட்டும் கட்டிப்புடிச்சு வணக்கம் வைப்பீங்களா எனக் கேட்டார்.


    இன்னொரு நாள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் மின்விளக்குகள் அணைந்துவிட்டன. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டு போனது போல இருந்தது. உடனே கத்திவிட்டேன். லைட் மீண்டும் வந்தவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார். அப்படித்தான் செட்டில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா.
    • உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார்.

    வெள்ளித் திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆசை மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.


    தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

    உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இது குறித்து நடிகை ரம்பா கூறியதாவது, திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும், புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்தபோது நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம். ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன்.

    இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் ட்ரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன். என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

    ×