search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramya Nambeesan"

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. #Thamizharasan #VijayAntony
    விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். 

    சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.



    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கி விரைவில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #Kasthuri

    ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த புகாரின் பெயரில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது. #AgniDevi #BobbySimha
    ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரியும் பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார்.

    அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.
     மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், 'அக்னி தேவ்' படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.



    பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்திற்கும் தனக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், தான் அக்னி தேவ் படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக தனது முகத்தை வைத்தும், குரல் மாற்றம் செய்தும் டிரைலர் வெளியிட்டது சம்பந்தமாக டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, &  470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரினார். அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் 'அக்னி தேவி' படத்தினை வெளியிட 'ஸ்டேட்டஸ்கோ' 20/03/19 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் திருமதி. எம்.கார்த்திகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கீதா தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். 



    இதுகுறித்து சங்கீதா கூறும்போது,

    எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படும், மருத்துவமனை ஒன்றை நடத்தும் டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.

    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood #Sangeetha

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sethupathi2 #VijaySethupathi
    வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

    அடுத்து சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்ட நாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுபோல் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார். அஜித்குமாரும், வெங்கட் பிரபுவும் இதுகுறித்து நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர்.



    இந்த நிலையில் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருவார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.

    இதற்கிடையே அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. #Sethupathi2 #VijaySethupathi #RamyaNambeesan #SuArunKumar

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசனும், வில்லனாக சோனு சூட்டும் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thamizharasan #VijayAntony
    கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் மற்றும் விஜய் ஆண்டனி, சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.



    முதல்முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood

    பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #AgniDev
    பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். 

    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்கி இருக்கின்றனர். ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் தலைப்பை மாற்றி இருக்கிறார்கள்.



    ‘அக்னி தேவ்’ என்னும் பெயரை ‘அக்னி vs தேவி’ என்று மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் மாற்றிய போஸ்டர் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நடிகைகள் மகிழ்வித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகள் முழுமையாக இழந்தவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தொடர்ந்து முகாமிலேயே தங்கியுள்ளனர்.

    மாநிலம் உள்ள முகாம்களில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் முகாமிலேயே தங்கி பரிதவித்து வருகிறார்கள்.

    அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். நிவாரண உதவிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    முகாம்களில் சோர்வுடன் இருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் களமிறங்கினர். பத்தனம்திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

    மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர். தங்களுடன் நடிகைகள் அமர்ந்து பாடுவதை கேட்ட குழந்தைகள், முகாம்களில் தங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதேபோல பிரபல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரள மந்திரி கடகம்பிள்ளை சுரேந்திரன், கலெக்டர் வாசுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. #RamyaNambeesan
    ரம்யா நம்பீசன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கவின் கதாநாயகனாக வருகிறார். ஷிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் வருகிற 27–ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை எதிர்த்து திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

    ‘‘நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். 

    ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’’

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 



    இதைத்தொடர்ந்து ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வருகிற 30–ந் தேதிவரை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
    மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். #NadigarSangam #Amma
    கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

    இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.



    கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
    ×