என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rathna Kumar"
- 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ’ஃபைட் கிளப்’ படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டது.
- இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ரஜினிகாந்த ஒரு ரெட்ரோ கேங்ஸ்டர் லுக்கில் மாசாக இருந்தார்.
லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அவரின் எக்ஸ் பக்கத்தில் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் நோக்கத்தை பற்றி அவர் விளக்கிருந்தார். அதில், "எனது முதல் சில படங்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் கதையை தேர்வு செய்து தயாரிக்க போகிறேன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
அபாஸ் ஏ ரகுமான் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபைட் கிளப்' படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டது. அந்த படத்தில் உறியடி விஜய குமார் மற்றும் மோனிஷா மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரத்ன குமார் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். ரத்ன குமார் லோகேஷ் கனகராஜின் படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரத்ன குமார் முன்னதாக மேயாத மான், ஆடை மற்றும் குலுகுலு போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படம் ஹாரர் கதை களத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் நயன்தாராவை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவலல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். ரத்ன குமார் அக்கதையை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார்.
- பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென் ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் எடுத்த படத்திலயே அதிக வசூலை அள்ளி குவித்த படம் லியோ. மார்வல் யூனிவர்ஸ், டி.சி யூனிவர்ஸ் போன்ற கான்செப்டுகளை ஹாலிவுட் படங்களிலே நாம் பார்த்து இருப்போம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் ஒரு கான்செப்டை உருவாக்கினார். இதற்கு முன் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டது. கமலின் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார். சமீபத்தில் விஜய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஃபைட் க்ளப்'படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்தார். இதுவே அவர் தயாரித்த முதல் படம்.
இன்று (மார்ச் 14) பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். லோகேஷின் நண்பரான இயக்குனர் ரத்னகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை ஸ்ருதிஹாசன் அப்போது உடனிருந்தனர். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ரத்ன குமார், "எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் உணவுக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்," என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்