search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rava Pakoda"

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவா - 2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    அரிசிமாவு - 1/4 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய்-  4
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
    பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

    அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.

    பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

    சூப்பரான ரவா பக்கோடா ரெடி.

    பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×