என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Re Release"
- படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது.
- 2 மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஜய்யின் 'கில்லி' படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது.
வசூல் சாதனை நிகழ்த்தியதால் அவர் நடித்துள்ள 'பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை' போன்ற வெற்றி படங்கள் மீண்டும் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் 'பூவே உனக்காக' படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது. இரண்டு மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
'பூவே உனக்காக' படம் 1996-ல் வெளியானது. இதில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார் ஜெய்கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விக்ரமன் இயக்கி இருந்தார்.
படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல டங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.
- கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது.
தற்போது சூப்பர் ஹிட் படங்கள் அனைத்தும் ரீலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆவலோடு ரசித்து கொண்டாடி வருகின்றனர். இப்படி ஏகப்பட்ட படங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.
அந்த வகையில் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளாகும்.
விஜய் நடிப்பில், இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்த்ராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'போக்கிரி' படத்தை தழுவி, வங்காள மொழியில் 2011ல் எடுக்கப்பட்ட 'மோனெர் ஜாலா' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள்.
- நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இதை மிக மிக கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ரசிகர்கள் தொடங்கி விட்டனர். பிறந்த நாள் முன்னிட்டு கடந்த வாரத்தில் விஜய் பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் டிரெண்டானது.
இதற்கிடையே, நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து, நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது 50வது பிறந்த ஆண்டில், சினிமா பிரவேசத்தில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வரும் 21ம் தேதி அன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.
அதன்படி, 21ம் தேதி அன்று பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ்மகன் ஆகிய 5 படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதில், மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'அபராஜிதடு' (அந்நியன்) பெயரில் வருகிற 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகிறது.
- இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.
கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் அந்நியன். இதில் பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் நடித்தனர். இப்படம் நகைச்சுவை, காதல், அதிரடி த்ரில்லர் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் சார்பில் தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.
இப்படம் ஓர் அப்பாவியான அம்பி சமூகத்தில் அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் சட்டத்திற்கு புறமான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடுபவர். இதனால் அனைவரும் இவரை இகழ்ந்து கேலி, கிண்டகள் செய்து "ரூல்ஸ் ராமானுஜம்" என அழைத்தனர்.
இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்குள் "அந்நியன்" என்னும் ஒரு ஆக்ரோசமான குணாதியசம் கொண்டுள்ள பிரமை ஒன்று உருவாகிறது. இவரால் சமாளிக்க முடியாத நேரங்களில் அந்த அந்நியன் இவருக்குள் இருந்து வெளிவந்து போராடுகிறார்.
சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் தவறுகளை செய்து வரும் சில குற்றவாளிகளை அந்நியனாக மாறி கருட புராணத்தின் படி தண்டனைகளை அளித்து வருகிறார், அம்பி. இதனை காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் மற்றும் சாரி (விவேக்) கொலைகளை பற்றி புலனாய்வு செய்து வருவார்கள்
அம்பி ஒருதலையாக நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் மனதளவில் வெறுக்கும் சதா, இவரை பிடிக்கவில்லை என அவமானப்படுத்த, இவருக்குள் மீண்டும் ரெமோ என்னும் ஒரு புதிய குணம் தோன்றுவது தான படத்தின் கதை.
இந்நிலையில் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகின்றன.இதே போன்று விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக 'அபராஜிதடு' (அந்நியன்) என்ற பெயரில் இப்படம் வருகிற மே 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட இருக்கிறது.
இப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் இதனை 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன்
- தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் (2003), 7ஜி ரெயின்போ காலனி (2004) புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து 'பேய் காதல்' பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் பாடல் ஆல்பங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு சோனியாஅகர்வால் கூறியதாவது :-
"எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.
நான் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' படத்தை 'ரீ ரிலீஸ்' செய்து தற்போது வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிப்பேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார்.
- பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமீப காலமாக திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'. இந்த படமானது தமிழக தியேட்டர்களில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் நேற்று அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்தனர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தியேட்டரில் பேனரை கிழித்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் எபினேஷ் கூறியிருப்பதாது,
காசி திரையரங்கில் தீனா படம் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். உற்சாகத்தில் நண்பர்களுடன் இருந்த உற்சாகத்தின் மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு எனது வண்டி சாவியை கொண்டு கில்லி பேனர் கிழித்துவிட்டேன். அதற்காக நான் அண்ணன் விஜய் அவர்களிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறி தலைவணங்கி மன்னிப்புக் கொண்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
The guy who tore #Ghilli banner in kasi today has apologised ??
— Sankalp Ayan™ (@iBeingSankalp) May 1, 2024
Game over !! pic.twitter.com/JuBbmjQndm
- சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
- ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
- நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.
தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
- அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்யில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் அஜித்தின் பில்லா, மங்காத்தா படங்களும் 'ரீ ரிலீஸ்' ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
அன்றைய தினம் தியேட்டர்களில் அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- அன்றைய தினம் ‘பில்லா’ படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' ,விஜய் நடித்த 'கில்லி' உள்ளிட்ட படங்கள் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடி வருகின்றன.
பிரபல நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் பில்லா. இப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் நடித்துள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கினார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2008 - ம் ஆண்டு 'பில்லா' படம் வெளியானது. இப்படம் 1980 -ல் ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் 'ரீமேக்' ஆகும்.
இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் 'பில்லா' படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் - டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1- ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் 150 தியேட்டர்களில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். இப்படம் மீண்டும் வெளியாக உள்ளதை யொட்டி அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
- சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.
விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு சென்று படத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பலப்பேர் கில்லி திரைப்படத்தை முதன் முதலில் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் கில்லி படத்தின் காட்சிகளும், தியேட்டரின் ரெஸ்பான்ஸ்களையும், பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ரீ ரிலிஸ் செய்த படத்தில் கில்லி திரைப்படத்திற்கே அதிக அளவில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ததற்கு நன்றி. 20 வருடங்களுக்கு முன் எப்படி உணர்ந்தேனோ அதை மீண்டும் உணர்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது.
- இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.
மக்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் கில்லி. படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இடம்பெற்றிருக்கும், வெள்ளி அண்டா நகைச்சுவை காட்சி, நான் தான் ஓட்டேரி நரி பேசுறேன், என்ற நகைச்சுவை காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
ஏப்ரல் 14 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம். இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்