என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recipes"

    • சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    வரமிளகாய் - 2

    கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    அரைத்த தக்காளி - 1 கப்

    நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
    • மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ - 1

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    துருவிய தேங்காய் - கால் கப்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

    அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

    மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

    இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

    • மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
    • உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    வெங்காயம் - 1

    கேரட் - 2

    முட்டைகோஸ் - அரை கப்

    குடைமிளகாய் - 1

    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

    சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

    பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.

    இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.

    இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!

    • இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கரண்டி

    ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு

    குடைமிளகாய் - சிறியது 1

    வெண்ணெய் - தேவையான அளவு

    மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

    சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

    புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி

    செய்முறை

    குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.

    அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.

    அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.

    கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.

    சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.

    • பாஸ்தாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று பாஸ்தாவில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மக்ரோனி - 1 கப்

    பால் - 2 1/2 கப்

    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

    கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    முந்திரி - 2 டீஸ்பூன்

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக்

    கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.

    அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி

    விட வேண்டும்.

    பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!

    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.
    • நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்

    கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி

    துருவிய தேங்காய் - கொஞ்சம்

    கொத்தமல்லி - கொஞ்சம்

    பச்சைமிளகாய் - இரண்டு

    பூண்டு - 2 பல்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி - ஒரு துண்டு

    தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி

    எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

    சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி

    மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

    மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

    பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

    உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

    வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.

    • நண்டு குருமா இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
    • சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 1 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சைமிளகாய் - 2

    தேங்காய் பால் - 2 டம்ளர்

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லிதழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்

    எண்ணெய் - 100 மிலி

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க தேவையானவை:

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

    சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்

    முந்திரி - 10

    பாதாம் - 6

    பூண்டு - 5 பல்

    செய்முறை:

    நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

    இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.

    • சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 300 கிராம்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10

    கொத்தமல்லி - 1/4 கப்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேறிப்பிலை - சிறிது

    பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

    • குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும்.
    • இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்

    குடைமிளகாய் - 1

    கேரட், பீன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கொத்தமல்லி - அரை கட்டு

    புதினா - அரை கட்டு

    தயிர் - 2 கப்

    உப்பு - தேவைக்கு

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    பட்டை - 2

    கிராம்பு - 2

    பிரிஞ்சி இலை - 2.

    செய்முறை :

    குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு அரை பாகம் வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.

    சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    • ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
    • இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய்,

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி

    • மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
    • இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்

    பஜ்ஜி மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    வரமிளகாய் - 2

    புளி - சிறிது

    பூண்டு - 4 பல்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சோடா உப்பு - 1 சிட்டிகை

    பெருங்காயத் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

    ×