என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » redmi 6 pro
நீங்கள் தேடியது "Redmi 6 Pro"
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. #Xiaomi #Redmi6
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்காலிக விலை குறைப்பு இன்று (பிப்ரவரி 6) துவங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 முதல் ரூ.2000 வரை குறைக்கப்படுகிறது.
சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பிற்கான அறிவிப்பினை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து ரெட்மி இந்தியா தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்காலிக விலை குறைப்பினை அறிவித்துள்ளன. சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்கவில்லை.
ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலையும் ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இறுதியில் ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 மதிப்புடைய உடனடி தள்ளுபடி மற்றும் 20 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள் பென்ச்மார்க்கிங் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. #Redmi6Pro
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் அடுத்த ஸ்மார்ட்போனாக ரெட்மி 6 சீரிஸ் இருக்கலாம். சமீபத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதற்கட்டமாக ரெட்மி 6 சீரிஸ் அமெரிக்க சந்தையில் வெளியிடப்படலாம்.
ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்+32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம்+32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி 6 ப்ரோ மாடல் கோல்டு, பிளாக், பின்க், புளு மற்றும் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 6 ப்ரோ மாடலில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080x2280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கலாம். ரெட்மி 6 ப்ரோ மாடலில் MIUI 10 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 6 ப்ரோ வெளியீடு குறித்து இதுவரை சியோமியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்தியாவில் ரெட்மி நோட் 6 போன்கள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோ சர்வதேச சந்தையில் அறிமுகமானது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மூன்று வித இன்டெர்னல் மெமரி மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் போகோ எஃப்1 மாடலின் பேஸ் வேரியன்ட் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரியும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ.20,999, ரூ.23,999 மற்றும் ரூ.28,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் ஆர்மர்டு எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்பட இருகிறது. இதன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய போகோ எஃப்1 மாடல் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #Redmi6Pro
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூன் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பல்வேறு டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார் வழங்கப்படுகிறது. இதனால் ரெட்மி 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் ஏஐ சார்ந்த போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும்.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது சமீபத்திய டீசரில் தெரியவந்தது. ரோஸ் கோல்டு, கோல்டு, புளு, பிளாக் மற்றும் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இன்ஃப்ராரெட் சென்சார் வழங்கப்படுகிறது.
பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெமரி அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 6 போன்றே 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இருவித மாடல்களில் வெளியிடப்படுகிறது.
சியோமி ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், 1.25um, PDAF, f/2.2
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார், 1.12um, f/2.2
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை மற்றும் Mi பேட் 4 சாதனத்தின் இதர விவரங்கள் அறிமுக தினத்தன்று தெரியவரும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X