search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relationship"

    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும்.
    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்றிதழ்களுடன் வேலைக்கு அமர்ந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டுக்கொள்கின்ற நிகழ்ச்சிகளும் நிகழவே செய்கின்றன. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற விரும்புவதில் தவறில்லை. அதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    போலித்தனம் என்பது ஏமாற்றுகின்ற முயற்சியின் வெளிப்பாடேயாகும். ஒரு பொருள் அமோகமாக விற்பனை ஆகிறது என்றால், அது எந்தப் பெயரில் விற்பனை ஆகிறதோ, அதே பெயரில் போலிகள் வரத்தொடங்கிவிடுகின்றன. உடனே அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற நிறுவனத்தார் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? பொய்யை நிஜம் போல நம்பவைப்பதில் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தானே.



    ஆனால் உறவுமுறைகளில் போலித்தனம் வெற்றிப்பெறுவதில்லை. நாம் நாமாக இருப்பதில்தான் நமக்கு பெருமை. நாம் இன்னொருவரைப் போல எதற்காக நடிக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டிக்கொண்டு எதற்காக வாழ வேண்டும்?

    ஆனால் உறவுகளில் போலித்தனம் மிகுந்தே காணப்படுகிறது. முகத்துக்கு நேராக புகழ்பவர்கள், யாரை புகழ்ந்தார்களோ, அவர்களையே இன்னொருவரிடம் இகழ்வார்கள். இதுபோன்ற போலிகளுக்கு செல்வாக்கும் பலமும் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிரில் அளவுக்கு மீறிப் புகழ்கிறவர்களை நம்புவது ஒரு பலவீனம். இந்த உறவுகள் நெருக்கடி நேரங்களில் துணை நிற்பதில்லை.

    பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். எப்போது எந்த பொய் காட்டிக் கொடுக்கும் என்று தெரியாது. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன், அச்சத்துடன் வாழ வேண்டி இருக்கும். யோசித்து பார்த்தால் போலித்தனமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அந்த நிலையில் உறவுகளை மேற்கொண்டால் போதும். நாம் இருக்கின்றபடி நம்மை ஏற்றுக்கொண்டு நம்மிடம் உறவு செய்கின்றவர்களே நல்ல உறவினர்களாக இருப்பார்கள். அவர்களே நிலைத்து நீடிக்கக் கூடியவர்கள். பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்த பிறகு ஏற்படுகின்ற உறவுகளே இயற்கையான உறவுகளாகும்.

    ஜெ.யுகாதேவி, சமூக ஆர்வலர்
    இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

    தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.



    நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் காதலிப்பதாக வெளியான தகவல்களுக்கு கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?. அது என்ன அவ்வளவு கஷ்டமா? என கேட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டிற்கும், அவர் நடிப்பிற்கும் வரும் முன்பிருந்தே தொடர்கிறது. எனக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும். அதுவும் நாங்கள் தனியாக செல்லவில்லை. எங்கு சென்றாலும் நண்பர்கள் 3-4 பேர் சேர்ந்து தான் செல்வோம். அப்படியே நான் காதலிப்பதாக இருந்தாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளிப்படையாக தான் காதலிப்பேன். நான் எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன், எதையும் மறைக்கமாட்டேன்” என கூறினார். 

    ராகுலின் இந்த விளக்கத்தினால் அவரது காதல் குறித்து வெளியான வதந்திகளுக்கு ஒரு திர்வு கிடைத்துள்ளது. இந்த வதந்திக்கு நடிகை நிதி அகர்வாலும் மறுப்பு தெரிவித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal
    ×