search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release tomorrow"

    • இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


    'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'தேர்தல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார்.

    'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.




    இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துஉள்ளார். .படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது

    நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்து உள்ளது ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.




    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    இந்த பாடலுக்கு 'தேர்தல் பாடல்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'.பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.



    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார்.




    இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
    சென்னை:

    பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார். அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் விடுதலை செய்யப்பட்டு உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபிடிக்கப்பட்டுள்ள அபிநந்தன், லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார் என்றும், டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
    இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானி தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபினந்தனை பாக். ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தங்களிடம் இருப்பது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டது.

    இதையடுத்து, பாகிஸ்தானிடம் சிக்கிய அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள்  வலியுறுத்தின.

    இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்ற பாக். பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பை வரவேற்கிறேன். இது பேச்சுவார்த்தைக்கான முதல் படியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், முன்னாள் முதல் மந்திரியான உமர் அப்துல்லாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், அபினந்தன் விடுதலை குறித்த இம்ரான்கான் அறிவிப்பை வரவேற்றுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
    இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்பட உள்ளார் என்பதை அறிந்த அவரது தந்தை வர்தமான், மக்களின் பிரார்த்தனையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan
    சென்னை:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. 
     
    ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்தது. இதனால் அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

    இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்பதை அறிந்த அவரது தந்தை வர்தமான், அனைவரது பிரார்த்தனையால் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அபினந்தன் விடுதலை செய்யப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். கடவுளின் ஆசியுடன் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரை நினைத்துப் பெருமிதப்படுகிறோம்  என தெரிவித்துள்ளார். #Abhinandan #BringBackAbhinandan
    இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. 
     
    அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்கரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.



    இதற்கிடையே, அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.
    #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
    ×