என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » removes
நீங்கள் தேடியது "removes"
வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு இயங்கும் பல போலி செய்தி தளங்கள் மூடப்பட்டுள்ளன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite
டாக்கா:
வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.இந்தநிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு பல போலி செய்தி தளங்கள் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து சட்டப்பூர்வமான செய்தி ஊடகங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட 9 ‘பேஸ்புக்’ பக்கங்களும், எதிர்க்கட்சிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்புகிற 6 போலி தனிநபர் கணக்குகளும் மூடப்பட்டுள்ளன.
இவை வங்காளதேச அரசுடன் தொடர்புடையவர்களால் உருவாக்கப்பட்டவை என்று ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கம்ப்யூட்டர் குற்ற தடுப்பு பிரிவின் தலைவர் நத்தானியேல் கிளெய்ச்சர் தெரிவித்தார். இதே போன்று டுவிட்டரும் 15 கணக்குகளை தற்காலிகமாக மூடி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Facebook #ElectionMeddling
வாஷிங்டன்:
அமெரிக்காவில 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியும், இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் கோடிக்கணக்கான உபயோகிப்பாளர்களின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதின் பின்னணியில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் மறைந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கணக்குகள் அஜ்ட்லான் வாரியர்ஸ், பிளாக் எலிவேசன், மைன்ட்புல் பீயிங், ரெசிஸ்டர்ஸ் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்டு இருந்தனவாம். ஒரு கணக்கை மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தொடர்ந்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது. #Facebook #ElectionMeddling #tamilnews

×

X