என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rennes
நீங்கள் தேடியது "Rennes"
பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்து விட்டதால் மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் - ரென்னெஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்ததால் ‘பெனால்டி’ சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது.
காயத்தால் தற்போது வெளியில் இருக்கும் பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர், கேலரியில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். தனது அணி தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நெய்மரை, ரென்னெஸ் ரசிகர் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த நெய்மர், அந்த ரசிகரின் முகத்தில் குத்து விட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தை மீறி அழுது கொண்டு மைதானத்திற்குள் ஓடிவந்த சிறுவனை கட்டியணைத்து ஜெர்சியை வழங்கினார் நெய்மர். #Neymar #PSG
பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு பிஎஸ்ஜி ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் பிஎஸ்ஜி 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. அப்போது நெய்மருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். இதனால் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி நெய்மரை நோக்கி அழுதுகொண்டே ஒடிவந்தான்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதை கவனித்த நெய்மர், அந்த சிறுவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி தன்னுடன் அணைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அந்த சிறுவன் நெய்மரின் ஜெர்சியை பிடித்து ஜெர்சி வேண்டும் என சைகை காட்டினார். உடனே நெய்மர் ஜெர்சியை கழற்றி கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தினார்.

Neymar... Making a kid's dream come true! ♥️ pic.twitter.com/fnhIocF52E
— Goal (@goal) September 24, 2018
சொந்த மைதானத்தில் வெற்றியை கொண்டாட நினைத்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆசைக்கு தடைபோட்டது ரென்னெஸ். #PSG
பிரான்ஸில் நடைபெற்று வரும் லீக் 1 கால்பந்து தொடரில் ஏற்கனவே பாரிஸ் செயின்ட்-ஜெரமைன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டம் பிஎஸ்ஜிக்கு சொந்தமான பார்க் டெஸ் பிரின்செஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி ரென்னெஸ் அணியை எதிர்கொண்டது.
சொந்த மைதானத்தில் ரென்னெஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அதன்பின் மிகப்பெரிய பார்ட்டியில் கலந்து கொள்ளவும் முடிவு செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அதிர்ச்சிகரமாக 0-2 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் சொந்த ரசிகர்கள் முன் வெற்றியை கொண்டாட முடியாமல் கவலையோடு வெளியேறினார்கள்.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அடுத்த போட்டியில் எஸ்எம் கேயன் அணியை எதிர்கொள்கிறது. தற்போது பிஎஸ்ஜி 37 போட்டிகள் முடிவில் 92 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மொனாகோ 77 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

×

X