search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reservation for Kannadias"

    • கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என்றார்.
    • தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நிறுத்தி வைப்பு.

    கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

    இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, "கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

    ×