என் மலர்
நீங்கள் தேடியது "Reshma Anna Rajan"
இயக்குநர் பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிவு இயக்கும் படத்தில் வித்தார்த் - ரேஷ்மா அன்னராஜன் இணைந்து நடித்து வருகின்றனர். #Vidharth
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு', `குரங்கு பொம்மை' போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்' படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி' படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதேநேரத்தில், பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிவு இயக்கத்தில் ஒரு படத்திலும் வித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் வித்தார்த் ஜோடியாக ரேஷ்மா அன்னராஜன் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான `அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தார்த்தின் `குரங்கு பொம்மை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த உதயகுமார் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஜோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ராம் - சதீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். #Vidharth