என் மலர்
நீங்கள் தேடியது "Resignation letter"
- இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.
- விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.
பாட்னா:
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டு வெளியில் வந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
பீகாரில் இதுவரை லல்லு பிரசாத் யாதவுடன் இருந்த கூட்டணியை நான் முறித்துக் கொள்கிறேன். அவர் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து இன்று முதல் நான் வெளியேறுகிறேன். அரசியல் சூழ்நிலை காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கடந்த ஆண்டு இந்தியா கூட்டணியை நான் உருவாக்கினேன். ஆனால் இந்தியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை. எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்ப்புகள் எதையும் குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றப்படவில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்தியா கூட்டணி தொடக்கத்தில் இருந்தே எதையும் செய்யவில்லை. எந்தவொரு திட்டத்தையும் இந்தியா கூட்டணியால் கொண்டு வரவும் இயலவில்லை.
அதற்கு மாறாக இந்தியா கூட்டணியின் போக்கு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கவனத்தை திசை திருப்பியதால் குறிப்பிட்ட இலக்குக்கு செல்ல இயலவில்லை. அந்த வகையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று முதல்-மந்திரிபதவியை ராஜினாமா செய்து விட்டேன்.
ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.
இனி நான் புதிய கூட்டணி அமைப்பேன். அந்த கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணியாக நிச்சயம் அமையும். எனது அரசுக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
- ரிங்கு படேல் மகனின் நோட்புக்கில் உள்ள பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.
- தற்போது அந்த உயர் அதிகாரியின் ராஜினாமா கடிதம் வைரலாகி வருகிறது.
மும்பை:
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மிஸ்தி இந்தியா லிமிடெட். ரூ.19 கோடி மதிப்புள்ள இந்நிறுவனத்தில் ரிங்கு படேல் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவர் ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி தனது நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ரிங்கு படேல் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த மாதம் 15-ம் தேதி எழுதி அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் சொந்தக் காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
தனது மகனின் நோட்புக்கில் உள்ள பேப்பரை பயன்படுத்தி, அதில் மிக எளிமையாக ராஜினாமா குறித்த விஷயத்தை தெரிவித்து, போட்டோ எடுத்து அனுப்பிவைத்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
- தனது குடும்ப சூழ்நிலை காரணம் என கடிதம்
- வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் வழங்கினார்
சேத்துப்பட்டு :
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மண்டகொளத்தூர், ஈயகொளத்தூர், வம்பலூர், ஆகிய 5-வது வார்டு தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வகுமாரி செந்தில் இவர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தியிடம் வழங்கினார்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், ஒன்றியக்குழு துணை தலைவர் முருகையன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழில்மாறன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரேமலதா ராஜசிம்மன், சம்பத், சாமுண்டீஸ்வரி குமார், கோவிந்தசாமி, உள்பட உடனிருந்தனர்.