என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resigns"

    பிரதமரின் பொருளாதார ஆலோசகரான சுர்ஜித் பல்லா இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #SurjitBhalla
    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான சுர்ஜித் பல்லா பதவி வகித்து வந்தார்.

    பொருளாதார நிபுணர்கள் ரத்தன் பி வாட்டல் (உறுப்பினர் செயலர்), ரதின் ராய் (பகுதி நேர உறுப்பினர்), ஆசிமா கோயல் (பகுதிநேர உறுப்பினர்) மற்றும் சமிகா ரவி (பகுதிநேர உறுப்பினர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.



    இந்நிலையில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1ந்தேதி விலகிவிட்டேன்’ என தெரிவித்து உள்ளார்.

    அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சுர்ஜித் பல்லா வேறு நிறுவனத்தில் சேரவிருப்பதாக கூறியிருக்கிறார். #SurjitBhalla
    உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த எம்.பி சாவித்ரிபாய் புலே கட்சியில் இருந்து இன்று திடீரென விலகினார். #SavitribaiPhule #BJPMP
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

    உ.பி.யின் பஹ்ரெய்ச் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. இந்நிலையில், சாவித்ரிபாய் புலே இன்று கட்சியில் இருந்து  திடீரென விலகினார். 



    இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ‘உத்தரப்பிரதேசத்தில் பாஜக சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறது. இதை கண்டித்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்றார்.

    உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  சமீபத்தில் ஆஞ்சநேயரும் ஒரு தலித் என பேசிய சில தினங்களில் தலித் எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #SavitribaiPhule #BJPMP
    பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா, சூயல்லா, எஸ்தர் மெக்வே ஆகிய 4 மந்திரிகள் பதவி விலகினார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி இப்போது பதவி விலகி உள்ளார். அவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ஆவார்.



    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் நிலையில், கலிலியோ செயற்கை கோள் திட்டத்தின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கூறி விட்டது. இதை தெரசா மேயும் உறுதி செய்துள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இப்போது மந்திரி சாம் கியிம் பதவி விலகி உள்ளார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே வரைவு திட்டம் வெளியிட்டதில் இருந்து பதவி விலகியுள்ள 7-வது மந்திரி சாம் கியிம் ஆவார்.  #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பினராயி விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். #KeralaMinisterResigns #MathewTThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மேத்யூ டீ தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

    தாமஸ் ராஜினாமா செய்ததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டி, பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும், நாளை மாலை அவர் பதவியேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், அமைச்சர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KeralaMinisterResigns #MathewTThomas
    இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல் குழப்பத்தில், தொழில் மற்றும் வெளிநாட்டுத்துறை துணை மந்திரி மனுஷா நாணயக்காரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #SriLanka #ManushaNanayakkara
    கொலும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பிரதமராக தாமே நீடிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

    இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மற்றும் இதர கட்சிகளில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்க ராஜபக்சே பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அடுத்தடுத்து, அதிரடியாக இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை துணை மந்திரி மனுஷா நாணயக்காரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பியுள்ள மனுஷா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.  #SriLanka #ManushaNanayakkara
    மிசோரம் மாநில சட்டசபை சபாநாயகர் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி  பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாலக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கினார். அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா மற்றும் சிலர் உடன் சென்றனர்.



    இன்று பிற்பகல் ஐசாலில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு செல்லும் ஹிபேய்,  முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலக் தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளரான ஹிபேய் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகாரின் அடிப்படையில் மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #MJAkbar #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    பெண் பத்திரிகயாளர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியான புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #Metoo #MJAkbar
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில்  டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிடிருந்தார்.

    இந்நிலையில், இன்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

    தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக  தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #Metoo #MJAkbar
    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். #AAP #Ashutosh #Resign
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணத்துக்காக தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறினார்.

    இது குறித்து அசுதோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “அனைத்து பயணத்துக்கும் ஓர் முடிவு உண்டு. ஆம் ஆத்மி கட்சி உடனான எனது தொடர்பு அழகானது மற்றும் புரட்சிகரமானது. முற்றிலும் தனிப்பட்ட காரணத்துக்காக நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். கட்சிக்கும், எனக்கு முழு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.



    பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த அசுதோஸ் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டதும், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதும் நினைவு கூரத்தக்கது.  #AAP #Ashutosh #Resign
    ஹைதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எழுத்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் ஜாக் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். #HyitiPrimeMinster #JackGuyLafontant #Resign
    போர்ட் ஆ பிரின்ஸ்:

    கரீபியன் கடல் தீவு நாடுகளில் ஒன்று, ஹைதி. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) ஒரு ஒப்பந்தம் போட்டனர்.

    அப்போது எரிபொருளுக்கான மானியத்தை விலக்கிக்கொண்டால்தான், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கல் போன்றவற்றுக்கு நிதி கிடைக்கும் என சர்வதேச நிதியம் கூறியது.

    இதையடுத்து எரிபொருட்களுக்கான மானியம் விலக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை 38 சதவீதமும், டீசல் விலை 47 சதவீதமும், மண்எண்ணெய் விலை 51 சதவீதமும் உயர்ந்தது.

    இதை எதிர்த்து மக்கள் கடந்த சில நாட்களாக பெருமளவில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதில் வெடித்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

    இதன் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

    இந்த நிலையில் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் ஜாக் பேசினார். அப்போது அவர் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். பதவி விலகலை அதிபர் ஜோவேனெல் மெய்சே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். #HyitiPrimeMinster #JackGuyLafontant  #Resign  #tamilnews
    பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை அடுத்து குஜராத் மாநில பா.ஜனதா துணை தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்த 53 வயதாகும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பானுசாலி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பா.ஜனதா தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய ராஜினாமாவை பா.ஜனதா ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பானுசாலி கடந்த 2007 முதல் 2012 வரையில் அப்தாசா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    சூரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் பானுசாலிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தார். இதுவரையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கமிஷனர் சதிஷ் சர்மா கூறியுள்ளார். பேஷன் டிசைன் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஏமாற்றி என்னை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

    என்னை மிரட்டுவதற்கு, அவருடைய உதவியாளர்களில் ஒருவர் செல்போனில் இச்சம்பவத்தை படம் எடுத்து உள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் எனக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் பானுசாலி.
    ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானியின் வலதுகரமாக இருந்துவந்த நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். #Afghanfinanceministerresigns #EklilHakimi
    காபுல்:

    அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டு தலைமை தூதராக முன்னர் பதவிவகித்தவர் எக்லில் ஹக்கிமி. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியை ஆப்கானிஸ்தானுக்கு பெற்று தருவதில் முக்கிய பங்காற்றிய இவரை தனது தலைமையிலான மந்திரிசபையில் நிதி மந்திரியாக பிரதமர் அஷ்ரப் கானி நியமித்தார்.

    அஷ்ரப் கானியின் வலதுகரமாக இருந்துவந்த நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி ஆப்கானிஸ்தான் அரசில் பொருளாதார ரீதியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு வழிநடத்தி சென்றார்.

    இந்நிலையில், தனது நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். நாளை (புதன்கிழமை) நான் நிதித்துறை அமைச்சகத்துக்கு செல்லும் கடைசி நாளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanfinanceministerresigns #EklilHakimi
    ×