என் மலர்
நீங்கள் தேடியது "Ridley Scott"
- 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
- 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் சை ஃபை , கிரைம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கதைகளை இயக்கும் திறமைவாய்ந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட். 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. போர்க்கள காட்சிகளுக்கு இன்றளவும் முன்னோடியாக இப்படம் விளங்குகிறது. தற்போது வெளியான 'கேம் ஆப் திரோன்ஸ்' மற்றும் 'பாகுபலி' போன்ற படங்களிலும் இந்த படத்தின் தாக்கத்தை காண முடியும். ஆனால் ரிட்லி ஸ்காட் 2000- ஆண்டிலேயே அப்பேற்ப்பட்ட படைப்பை படைத்தது இன்றும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார். இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. பால் மெஸ்கல் மற்றும் பெட்ரோ பாஸ்கல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம், வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஐரோப்பிய திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 22-ந் தேதி அமெரிக்காவிலும் வெளியாகிறது. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.