என் மலர்
நீங்கள் தேடியது "Rima Kallingal"
- ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார் என சுசித்ரா கூறியிருந்தார்.
- சுசித்ரா சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர் மீது புகார் அளித்துள்ளேன் என ரீமா கல்லிங்கல் கூறினார்.
மலையாள பட உலகம் பாலியல் புகாரில் சிக்கி அல்லோலப்படும் நிலையில் தமிழில் 'யுவன் யுவதி, சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாக பின்னணி பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார்.
அவர் கூறும்போது, "ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார். அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு போதை பழக்கத்துக்கு அடிமையானார்கள். இந்த தகவலை அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். போதை விருந்து நடத்தியதால்தான் ரீமா கல்லிங்கலின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது'' என்றார். இது பரபரப்பானது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரீமா கல்லிங்கல் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்வதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ரீமா கல்லிங்கல் வெளியிட்டுள்ள பதிவில், "சுசித்ரா தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். அவர் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
- கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு வெளியான “ருது” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர்.
- பின்னணி பாடகி சுசித்ரா வின் இந்த குற்றச்சாட்டை நடிகை ரீமா கல்லிங்கல் மறுத்தார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு வெளியான "ருது" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் 'யுவன் யுவதி', 'சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் போதை விருந்து நடத்தியதாக அவர் மீது சமுகவலைதளங்கள் மூலமாக பிரபல பின்னணி பாடகி சுசித்ரா குற்றம்சாட்டினார். நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம்பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டதாகவும், போதை விருந்து நடத்தியதால் தான் அவரது சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னணி பாடகி சுசித்ராவின் இந்த குற்றச்சாட்டை நடிகை ரீமா கல்லிங்கல் மறுத்தார். பாடகி சுசித்ரா ஆதாரம் இல்லாமல் தன் மீது புகார் கூறியிருப்பதாகவும், அவர் கூறியது போன்று எதுவும் நடக்கவில்லை எனவும், அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் தெரிவிப்பேன் என்றும் நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கொச்சி போலீசில் புகார் செய்திருக்கிறார். நடிகை தனது புகாரை கொச்சி துணை போலீஸ் கமிஷனரிடம் ஆன்லைன் மூலமாக கொடுத்திருக்கிறார்.
அவர் தனது புகாரில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், சமூகவலைதளங்கள் மூலமாக தனது இமேஜை அழிக்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நடிகை ரீமா கல்லிங்கல் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட அவர், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
நடிகை ரீமா கல்லிங்கல்லின் இந்த புகார் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

