என் மலர்
நீங்கள் தேடியது "Rimi Sen"
- கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 92 லட்சம் கொடுத்து புதிய லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார்.
- நிறுவனம் சார்பில் முறையான தீர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
பிரபல நடிகை ரிமி சென் தான் வாங்கிய ஆடம்பர லேண்ட் ரோவர் காரில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் சட்டப் போராட்டத்தையும் துவங்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தனக்கு ரூ. 50 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை ரிமி ரூ. 92 லட்சம் கொடுத்து புதிய லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியதில் இருந்தே, அதில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக ரிமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காரில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நிறுவனம் சார்பில் முறையான தீர்வு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
காரின் சன்ரூஃப், சவுண்ட் சிஸ்டம் மற்றும் ரியர்-என்ட் கேமரா உள்ளிட்டவை சரியாக செயல்படவில்லை என ரிமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான புகார்களுக்கு நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ரிமி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளார்.
இது தொடர்பான மனுவில் கார் விவகாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் தனக்கு ரூ. 50 கோடி நஷ்ட ஈடு, வழக்கை நடத்துவதற்கு ரூ. 10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாழாகி இருக்கும் காரை மாற்றிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.