என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "risk of disease spread"
- சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது
- கீரணத்தத்தில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் ஈடுபட்டனர்.
சரவணம்பட்டி,
கோவை கீரணத்தம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அங்குள்ள செடிகளுக்கு நீர் உபயோகப்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் 4 மின் மோட்டார்களும் பழுந்தடைந்து விட்டன. இதனால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவு நீரை குடிசை மாற்று வாரியத்தின் பணியாளர்கள் சாலையில் திறந்து விடுகின்றனர்.
இதனால் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் அருகே உள்ள லட்சுமி கார்டன் நகர் வரை இந்த கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் சரவணம்பட்டி-கீரணத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சியும், கீரணத்தம் ஊராட்சியும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் குப்பை கொட்டுவதற்கு கூட குப்பை தொட்டி வைக்காமல் அவர்கள் சாலை ஓரங்களிலேயே குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத் மக்கள் கலைந்து சென்றனர்.
- சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
- அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். குறிப்பாக மாலை, காலை நேரங்களில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பஸ் ஏறி செல்வார்கள்.
இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் ஒன்று உள்ளது.
இந்த கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பதால் இந்த கழிப்பிடத்தில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வெளியேறி வருகிறது.
இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக சிரமம் அடைந்து வருகின்றனர்.
பஸ் வரும் வரை மூக்கை முடி கொண்டு அங்கேயே நிற்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது. துர்நாற்றம் காரணமாக நோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிப்பிடத்தை சரிவர சுத்தம் செய்து பொது மக்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நோய் தோற்று ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்