என் மலர்
நீங்கள் தேடியது "river link"
கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய மந்திரி நிதின் கட்கரி டுவிட்டர் செய்தியில், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.