search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbed of jewelry and money"

    • தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
    • அவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.

    தேனி:

    தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கனகராஜன் மகள் சூர்யகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சூர்யகலா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை பார்க்க கந்தன்ராஜன் மாமனார் வீட்டிற்கு சென்றார். தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.

    இதில் இருதரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கந்தன்ராஜனை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கனகராஜன் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
    • வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

    சூலூர்,

    கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி லட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜ்குமார். தி.மு.க பிரமுகரான இவர் போகம்பட்டி ஊராட்சி துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.இவருக்கு திலகவதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜ்குமார், அவரது மனைவி திலகவதி, ராஜ்குமாரின் தாயார் வீட்டில் இருந்தனர்.அப்போது வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்களிடம், உனது சகோதரர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என திலகவதியிடம் கேட்டனர். அதற்கு அவர் தெரியாது என பதில் அளித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் பட்டா கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ராஜ்குமார், திலகவதி மற்றும் ராஜ்குமாரின் தாயாரை வெட்டினர்.

    மேலும் வீட்டில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பினர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திலகவதியின் சகோதரர் ரமேஷ் என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான பணம் வசூலித்ததாகவும், அதனை ெகாடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதும், இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாகவே 5 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து மிரட்டி உள்ளனர்.ஆனால் நகை, பணத்தை எதற்காக ெகாள்ளையடித்து சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூன்று வாலிபர்கள் ஜானகியிடம் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு உள்ளனர்.
    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி தலைமுறைவாகி விட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி ஆத்து தோட்டம் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ஜானகி (வயது 36). நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது மூன்று வாலிபர்கள் ஜானகியிடம் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு உள்ளனர்.

     உடனே ஜானகி இருப்பதாக கூறி உள்ளார். இதனையடுத்து மூன்று பேரில் ஒருவன் கேட்டின் அருகே நின்று கொண்டார். இரண்டு பேர் உள்ளே சென்றுள்ளனர். அப்போது திடீரென ஜானகி கழுத்தில் கத்தியை வைத்து நகையை கொடுத்து விடு ,இல்லையென்றால் குத்தி விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவனின் கழுத்திலும் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மனைவி இருவரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி தலைமுறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் நகை பணத்தைப் பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி ேதடி வருகின்றனர்.இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை
    • வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் (70). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அத்திபாளையம் பிரிவில் உள்ள சர்ச்சுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினர்.

    மறுநாள் காலையில் அவர் வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). மில் தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக காரமடைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 55 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஜெயபால் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×