என் மலர்
நீங்கள் தேடியது "Robert Vadra"

இவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கடந்த மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.
ராபர்ட் வதேராவின் பாதுகாப்பு கருதி அவர் எந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற விபரத்தை மூன்றாம் நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என சிறப்பு நீதிபதி அரவிந்த் குமாரிடம் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் இந்த மனுவின்மீது வரும் 24-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.
அந்த கெடு முடிந்ததால் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக எந்த முடிவையும் நீதிபதி அரவிந்த் குமார் நேற்று எடுக்கவில்லை.
அதேசமயம் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ந் தேதி பிறப்பிப்பதாக கூறி அன்றைய தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். #RobertVadra #AnticipatoryBail
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.
லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED

மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது.
இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அரசு நிலத்தை தனது நிறுவனத்துக்கு வாங்கி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிறகு அவர் ராணுவம், பெட்ரோலியம், நிலக்கரி உள்பட பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
மேலும் அவர் லஞ்சப் பணத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்தில் இந்த விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சார்பில் ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் என்று தகவல் வெளியானது. உடனடியாக ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். கடந்த 2-ந்தேதி இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு பிப்ரவரி 16-ந்தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
அதே சமயத்தில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.47 மணிக்கு டெல்லி ஜாம் நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்.
கடந்த மாதம் 23-ந் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா தனது வெள்ளை நிற டொயட்டோ காரில் ராபர்ட் வதேராவை அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விட்டு சென்றார். இதுபற்றி அவர் கூறுகையில், ராபர்ட் வதேரா எனது கணவர். அவர்தான் என் குடும்பம். அவருக்கு ஆதரவாக நான் இருப்பேன்” என்றார்.

இதில் 2 சொத்துக்களின் மதிப்பு ரூ.85 கோடியாகும். மற்ற 7 சொத்துக்களின் மதிப்பு தெரியவில்லை. ஆனால் ராபர்ட் வதேரா தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று மறுத்தார். இதுபற்றி அவர் விரிவாக எழுதி கொடுத்துள்ளார்.
ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரி பற்றி தெரியுமா? என்றும் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் அவர் தெரியாது என்றே பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று இரவு 9.40 மணிக்குதான் விசாரணை முடிந்தது. அதன் பிறகு ராபர்ட் வதேரா தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதே வெள்ளை நிற டொயட்டோ கார் அவரை அழைத்து சென்றது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இதற்காக அவர் 11.25 மணிக்கு ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருக்கு முன்னதாக அவரது வக்கீல்கள் அங்கு வந்து காத்திருந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அதன்பிறகு வதேராவை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இன்றும் அவரிடம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். லண்டனில் உள்ள 9 சொத்துக்களும் வேறு வேறு பெயர்களில் எப்படி வாங்கப்பட்டது என்று இன்றும் அவரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.
இன்று மதியத்துக்கு பிறகும் வதேராவிடம் விசாரணை நீடித்தது. அவர் அளித்த சில தகவல்கள் வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சொத்துக்கள் வாங்கியதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பதுதான் அமலாக்கத்துறையின் முக்கியமான கேள்வியாக உள்ளது. அதற்கு வதேரா எத்தகைய பதில் அளித்து உள்ளார் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே ராபர்ட் வதேரா வருகிற 12-ந்தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த அரசு நிலம் மோசடி தொடர்பாக வதேராவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வதேராவை மத்திய அரசு துன்புறுத்துவதாக கூறி பிரியங்கா பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. #RobertVadra #ED

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ஸ்லைலைட் ஹாஸ்பிடா லிட்டி எனும் நிறுவனத்தையும் வதேரா நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக அவரது தாயார் மவுரீன் வதேராவும் இருக்கிறார்.
இந்த நிறுவனம் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் அரசு நிலம் வாங்கப்பட்டது. அதில் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர்களை பயன்படுத்தி முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்தபோது ராஜஸ்தான் ஐகோர்ட்டு அதற்கு தடை விதித்தது.
நேற்று இந்த தடையை ராஜஸ்தான் ஐகோர்ட்டு விலக்கியது. மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு வரும் ராபர்ட் வதேராவை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
எனவே வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜர் ஆவார் என்று தெரிகிறது. இதனால் அரசு நிலத்தை காங்கிரஸ் செல்வாக்கை பயன்படுத்தி ராபர்ட் வதேரா முறைகேடு செய்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. #RobertVadra
புதுடெல்லி:
டெல்லியைச் சேர்ந்த பிரபல ஆயுத தரகர் பண்டாரி. இவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் லண்டனில் அவர் 1.9 மில்லியன் பவுண்டு மதிப்பில் எஸ்டேட் வாங்கியதும், பின்னர் அந்த எஸ்டேட்டை அதே விலைக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பண்டாரியின் உறவினர் சுமித் சதாவின் மின்னஞ்சலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பண்டாரி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மின்னஞ்சல் மூலம் அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மனோஜ் அரோரா மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் லண்டனில் வாங்கப்பட்ட சொத்துக்கு ராபர்ட் வதேரா தான் உண்மையான உரிமையாளராக இருக்கலாம், சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் அந்த சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இதை அறிந்து கொள்ளும் வகையில் மனோஜ் அரோராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி டெல்லியில் மனோஜ் அரோராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதேபோல் கடந்த வாரமும் அவரிடம் இரண்டு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
மனோஜ்அரோரா, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடா லிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra

சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது கூறப்பட்ட நில மோசடி விவகாரம் விசுவரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார்.
ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. முதல் சம்மனுக்கு பதில் அளிக்காத ராபர்ட் வதேரா 2-வது சம்மனுக்கு தனது பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
ராபர்ட் வதேராவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அமலாக்கத்துறை 3-வது முறையாக மேலும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராக வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை முன்பு ஆஜரானால் வாக்கு மூலம் கொடுக்க வேண்டியதிருக்கும். அது எதிர்காலத்தில் தனக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும் என்று வதேரா பயப்படுகிறார். எனவே பா.ஜ.க. ஆட்சி தன்னை பழி வாங்குவதாக ராபர்ட் வதேரா கூறி வருகிறார். #RobertVadra
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015-ம் ஆண்டு முறைகேடாக நிலம் வாங்கியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 374.44 ஹெக்டேர் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்தது.
பின்னர் அமலாக்கத்துறை இந்த நில முறைகேட்டில் பெரிய அளவில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்தது. வதேராவுக்கு தொடர்புள்ள மகேஷ் நாகர் போன்ற சிலரது இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த வருடம் நாகரின் நெருங்கிய கூட்டாளி அசோக்குமார், ஜெய்பிரகாஷ் பாகார்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் உள்பட சிலரது ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்தது. அமலாக்கத்துறை இந்த வழக்கில் வதேரா பெயரை சேர்க்கவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் சில நில மோசடிதாரர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
நவம்பர் மாத தொடக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.

எனவே நேற்று மீண்டும் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. அதில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் உங்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும். அதற்காக அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை அழுக்கு தந்திர துறைகளாக பயன்படுத்தி வருகிறது. பா.ஜனதா 5 வருடங்களாக இதுபோன்ற பொய்யான, போலியான தகவல்களை விசாரணை அலுவலகங்களை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது. தேர்தலுக்காக இப்போது மக்களை திசைதிருப்ப நினைக்கிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது” என்றார். #RobertVadra
சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பெங்களூர் கங்கேனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின் டி.எல்.எப். நிறுவனம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் மீது நாங்கள் லோக்அயுக்தா அமைப்பில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RobertVadra