search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Enfield Classic 350"

    • பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
    • புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.

    ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து அதன் பாரம்பரியமான வாகன வடிவமைப்பு, ரசனைமிகு அம்சங்கள் மற்றும் தனித்துவமான பொறியியல் பாரம்பரியம், ராயல் என்பீல்டின் மரபணுவின் சாராம்சத்தையும் தக்கவைத்து வருகிறது. அந்தவகையில், புதிய '2024 கிளாசிக் 350' பைக் கண்கவர் புதிய தோற்றத்துடன் பெருமையுடன் அறிமுகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதன் பாரம்பரிய புகழையும் அப்படியே கொண்டுள்ளது.

    மிடுக்கான வாகனம் என்ற நற்பெயரை பாதுகாக்கும் அதே நேரத்தில் அனைவரும் அணுகக்கூடியதாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். இதற்கான முன்பதிவு மற்றும் சோதனை ஓட்ட சேவைகள் இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது.


    ஹெரிடேஜ் (மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ), ஹெரிடேஜ் பிரீமியம் (மெடாலியன் புளூ), சிக்னல்ஸ் (கமாண்டோ சாண்ட்), டார்க் (கன் கிரே மற்றும் ஸ்டீல்த் பிளாக்) மற்றும் குரோம் (எமரால்டு) ஆகிய 5 புதிய ரகங்களில் 7 பளபளக்கும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, 'பைலட் லேம்ப்', 'கிளஸ்டரில் கியர் பொசிஷன்' இன்டிகேட்டர் மற்றும் 'டைப் சி' சார்ஜிங்க் பாயிண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பி.கோவிந்தராஜன் கூறுகையில், ''ராயல் என்பீல்டின் தூய்மையான மோட்டார் சைக்கிளிங் மரபணுவின் அசல் பிரதிபலிப்பாக 'கிளாசிக் 350' இருக்கும். அதன் மிடுக்கு, நுட்பமான வேலைப்பாடுகள் மற்றும் காலத்தால் அழியாத ஸ்டைலான அழகின் அப்பழுக்கற்ற அடையாளமாகவும் இருக்கும்'' என்றார்.

    மேற்கண்ட தகவல் ராயல் என்பீல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும்.
    • அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஜாவா 350 மோட்டார்சைக்கிளை இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.

    அப்போது மெரூன், பிளாக், மிஸ்டேக், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனையானது.

    இந்நிலையில், இந்த ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய பைக்குகளின் அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 1,98,950

    அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,08,950

    குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,14,950

    குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,23,950

    இந்த பைக்கில் 334 சிசி லீக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.2 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.

    ராயல் என்பீல்ட் கிளாசிக் 350, ஹோண்டா சிபி 350 மற்றும் ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளுக்கு ஜாவா 350 பைக் போட்டியாக வரவுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்குகிறது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சீரிஸ் மாடல்களில் இதுவரை பின்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கன்மெட்டல் கிரே மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை இந்தியாவில் ஏபிஎஸ் அம்சம் குறித்து ராயல் என்ஃபீல்டு சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஏப்ரல் 2019-க்குள் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வழங்குவதை இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ஏபிஎஸ் அம்சம் வழங்குவது குறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    பின்புறம் டிஸ்க் பிரேக் மட்டுமின்றி மோட்டார்சைக்கிளில் பின்புரம் ஸ்விங் ஆர்ம் மாற்றப்பட்டுள்ளது. பினபுறம் டிஸ்க் பிரேக் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் வழக்கமான 280 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரின்ட் விலை ரூ.8,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    ×