என் மலர்
நீங்கள் தேடியது "rr"
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது. #RRvCSK #IPL2018
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. வாட்சன், ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முந்தைய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தார். வாட்சன் மற்றும் ரெய்னா ஜோடி சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். 12-வது ஓவரில் வாட்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ரெய்னாவும் 52 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய தோனி , பில்லிங்ஸ் கூட்டணி இறுதி கட்டத்தில் எடுத்த முயற்சியால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா 2 விக்கெட் எடுத்தார்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. #IPL2018 #RRvCSK