என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RRvCSK"

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்கள் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையுடன் இணைந்துள்ளார் ஜோஸ் பட்லர். #IPL2018 #RRvCSK
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.



    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.

    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக நான்கு முறை அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சேவாக் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களுக்கு மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்க கிங்ஸ் அதிரடி வீரர் ரெய்னா சாதனைகள் படைத்துள்ளார். #IPL2018 #Raina
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர்க கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னாதான். அவர் 35 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 3 அரைசதத்துடன் 313 ரன்கள் குவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே விளையாடி வருகிறார். 11-வது சீசனில் விளையாடிடும் ரெய்னா, ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.



    அத்துடன் ஜடேஜா பந்தில் ரகானே ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் ஒரே பந்து வீச்சாளருக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் பந்து வீசும்போது 16 முறை கேட்ச் பிடித்து பொல்லார்டு முதல் இடத்தில் உள்ளார். ரெய்னா பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சில் தலா 12 கேட்ச் பிடித்துள்ளார். சாஹல் பந்து வீச்சில் ஏபி டி வில்லியர்ஸ் 11 கேட்ச் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
    ஜெய்ப்பூர் மைதானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனதால், தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. #IPL2018 #RRvCSK
    ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றதும் எம்எஸ் டோனி பீல்டிங்குதான் தேர்வு செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். வர்ணனையாளர் கூட டோனியிடம் ஆச்சர்யத்துடன் ஏன் பேட்டிங் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு டோனி தலைமை பயிற்சியாளர் உள்பட உயர்நிலைக்குழுவின் முடிவுதான் இது என்றார். அதற்கு காரணம் உண்டு. ஜெய்ப்பூர் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இல்லை. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டால், சேஸிங் செய்வது கடினம். இதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.



    முதல் பேட்டிங் செய்த சென்னை அணி நியாயமான ஸ்கோரான 176 ரன்கள் சேர்த்தது. ஆனால் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 177 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எப்போதும் சேஸிங்கையே விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை கணித்தது தவாறாகப் போகி, தோல்வியை சந்தித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டத்தில் சேஸிங்கில் ஐந்து போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். #IPL2018 #RRvCSK
    ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராஜஸ்தான் அரசுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.



    ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இந்த போட்டியை காண மைதானம் வந்திருந்தார். இவர் போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
    ஜெய்ப்பூரில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். #IPL2018 #RRvCSK
    ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் ஜெய்ப்பூர் சவாங் மான்சிங் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7.30 மணிக்கு சுண்டப்பட்டது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் சுண்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி ‘ஹெட்’ என்று அழைத்தார். டோனி அழைத்தபடி ‘ஹெட்’ விழ, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    சென்னை அணியில் த்ருவ், லுங்கி நீக்கப்பட்டு கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு. 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. பிராவோ, 7. ஜடேஜா, 8. கரண் சர்மா, 9. டேவிட் வில்லே, 10. ஹர்பஜன் சிங், 11. ஷர்துல் தாகூர்.



    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரகானே, 2. ஜோஸ் பட்லர், 3. பிரஷாந்த் சோப்ரா, 4. சஞ்சு சாம்சன், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஸ்டூவர்ட் பின்னி, 7. கிருஷ்ணப்பா கவுதம், 8. ஜாப்ரா ஆர்சர், 9. அங்கித் ஷர்மா, 10. ஜெய்தேவ் உனத்கட், 11. இஷ் சோதி.
    ×