என் மலர்
நீங்கள் தேடியது "Ruban"
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை சிம்பு எடுக்க இருக்கிறார். #STRinMaanaadu #VP9
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மகத், கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி பூஜையுடன் படம் தொடங்கப்பட உள்ளது.

‘மாநாடு’ கதையைக் கேட்டுவிட்டு, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் சிம்பு. உடலைக் குறைத்து, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல உள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி பட பூஜைக்குத்தான் சிம்பு சென்னை திரும்புவார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.
சிம்புவுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. #STR #STRinMaanaadu #VP9
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `மாநாடு' படத்திற்காக மங்காத்தா கூட்டணி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9
சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அர்ஜூன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அர்ஜூன் இணையும் பட்சத்தில் மங்காத்தா கூட்டணி இணைவது உறுதியாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STRinMaanaadu #VP9 #STR #Maanadu #Arjun
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி, சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு சிறப்பு விருந்தாக இருக்கும், அடுத்த வருடம் நம்முடையது என்று குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முழு கதையையும் தயார் செய்துவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு அதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளார்.
Heard a wonderful narration frm my dir @vp_offl . Its like a Roller Ghoster.. zig zag play... Definitely it wl b an enjoyable Treat for #STRFans & also a master piece in our #STR 's journey! Next year is ours! HAPPY NEW YEAR Everyone.@STRhere@BoopathyDeepan@johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) December 27, 2018
கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு செமயான விருந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
மாநாடு படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்துரைத்தார். கதை கேட்க ரோலர் கோஸ்டர் போல் இருந்தது. ஏற்ற இறக்கமான திரைக்கதை. கண்டிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு விருந்தாக அமையும். அதுமட்டுமின்றி சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு ஒரு முக்கிய படமாக இருக்கும். அடுத்த வருடம் நம்முடையது தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9 #STR #Maanadu