என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ruby Trichy Warriors"
- முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 100 ரன்களில் சுருண்டது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார். ஆதித்யா 26 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் மதுரை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் திருச்சி அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது.
இறுதியில், திருச்சி அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சந்தோஷ் ஷிவ் 31 ரன்னும், அமித் சாத்விக் 23 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் மதுரை அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது.
மதுரை அணி சார்பில் ஜெகதீசன் கவுசிக் 4 விக்கெட்டும், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார்.
அனிருத் , ஆதித்யா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா 26 ரன்னில் அவுட்டானார். அருண் கார்த்திக் 5 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சதுர்வேதி 15 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.
கோவை:
கோவையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.
கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 15 ரன்னில் அவுட்டானார். கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் தலா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிஜித் சந்திரன் 17 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கோவை அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாருக் கான் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- திருச்சி அணியின் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
கோவை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.
இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
- நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்னேஷ் 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நிஷாந்த் 25 ரன்கள், மோனிஷ் 24 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
துவக்க வீரர்கள் அமித் சாத்விக் 20 ரன்களும், முரளி விஜய் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த பின்னர், நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர். நிதிஷ் ராஜகோபால் ஆட்டமிழக்காமல் 64 ரன்களும், ஆதித்ய கணேஷ் ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் விளாச, திருச்சி அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- அதிரடியாக ஆடிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க திண்டுக்கல் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
- திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் பிரதீப் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் கேப்டன் ஹரி நிஷாந்த்- மணி பாரதி ஜோடி சற்று தாக்குப்பிடித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் நிஷாந்த் 25 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். விஷால் வைத்யா 16 ரன்களில் வெளியேறினார். மோகித் ஹரிஹரன் (8), ராஜேந்திரன் விவேக் (6) ஆகியோர் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து சிலம்பரசன் 2 ரன்கள், மனோஜ் குமார் 1 ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ரகில் ஷா தலா 2 விக்கெட், சரவணகுமார், யாஸ் அருண் மொழி, அந்தோணி தாஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நிஷாந்த் உடன் ஆர் ரோகித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினாலும், கேப்டன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். அவர் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி அணி பேட்டிங் செய்து வருகிறது.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்டிரியாட்ஸ் (தூத்துக்குடி) அணி அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.
3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சீசெம்மதுரை பாந்தர்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை இந்த முறை புதிய உரிமையாளர்கள் வாங்கி இருப்பதால் அதன் பெயர்களை மாற்றி உள்ளனர். அதன்படி ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் வி.பி.காஞ்சி வீரன்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. நெல்லை, திண்டுக்கல்லில் (நத்தம்) தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 போட்டிகளும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரண்டு போட்டிகளும் (மாலை 3.15, இரவு 7.15) மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டமும் (இரவு 7.15) நடைபெறும்.
ஆகஸ்டு 5-ந் தேதி வரை ‘லீக்’ ஆட்டம் நடைபெறும். 7-ந் தேதி ‘பிளே ஆப்’ சுற்று தொடங்குகிறது. ‘தகுதி சுற்று1’ ஆட்டம் (குவாலிபையர்1) நெல்லையிலும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) மற்றும் தகுதி சுற்று-2 (குவாலி பையர் 2) ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் 2 சீசனிலும் ஒவ்வொரு அணியிலும் விளையாடிய வீரர்கள் இந்த சீசனில் வேறு அணிக்காக ஆடுகிறார்கள். 3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட்டனர். இதனால் முதல் 2 போட்டியை விட இந்த சீசன் போட்டி அதை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களதுதிறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடுவார்கள்.
3-வது டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் என மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது. 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை எதிர் கொள்கிறது. அந்த ஆட்டம் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.
டி.என்.பி.எல். போட்டிகள் அனைத்தும் ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1’ சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NammaOoruNammaGethu #TNPL2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்