என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rukmani vasanth"

    • தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார்.
    • இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

    ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு.

    கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை.

    பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

    இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் "23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை". மிஸ் யூ கேப்டன் என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் 2020 ஆம் ஆண்டு இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது
    • இப்படத்தில் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடிக்கிறார்.

    அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடிபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து மலையாள பிரபல நடிகரான பிஜு மேனன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் 2020 ஆம் ஆண்டு இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது . இதற்கு முன் பிஜு மேனன் தமிழ் படங்களான மஜா, தம்பி, பழனி, போர்களம் மற்றும் அரசாங்கம் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இப்படத்தின் மூலம் பிஜு மேனன் 14 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க போகிறார். இதுக்குறித்தான அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே இப்படத்தில் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதியின் 51 திரைப்படமாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படம் தற்பொழுது சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு 75 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 51 திரைப்படமாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ருக்மணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×